Webdunia - Bharat's app for daily news and videos

Install App

க பெ ரணசிங்கம் படத்தை பார்க்க ஏன் இவ்வளவு கட்டணம்? வெளியான ரகசியம்!

Webdunia
புதன், 23 செப்டம்பர் 2020 (16:32 IST)
விஜய் சேதுபதி நடித்துள்ள க பெ ரணசிங்கம் படத்தினை ஓடிடியில் பார்க்க 200 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக திரையரங்குகள் திறக்கப்படாமல் உள்ள நிலையில் பல்வேறு திரைப்படங்கள் ஓடிடி வழியாக ஆன்லைனில் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள க\பெ ரணசிங்கம் திரைப்படமும் ஓடிடி மூலமாக வெளியாக உள்ளது.

ஜீ நிறுவனத்தால் வாங்கப்பட்டுள்ள இந்த படத்தை ஒரே சமயத்தில் டிடிஎச் மற்றும் ஓடிடியில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். அதன்படி அக்டோபர் 2 அன்று ஜீ ப்ளெக்ஸ் சேனல் மூலமாக ஒளிபரப்பப்படவும், ஜீ5 தளத்தில் பார்க்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த ஜீ ப்ளெக்ஸ் சேனலானது ஏர்டெல் டிஜிட்டல் டிவி, டாடா ஸ்கை, டி2எச், டிஷ் டிவி உள்ளிட்ட டிடிஎச்களில் பார்க்கும் வசதி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்தை ஒரு தடவை ஜி பிளக்ஸில் பார்க்க 199 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணம் தியேட்டர் கட்டணத்தை விட அதிகமாக உள்ளதாக ரசிகர்கள் கருத்து சொல்ல ஆரம்பித்துள்ளனர். ஆனால் இதற்கான காரணம் என்ன என்பது இப்போது வெளியாகியுள்ளது. ஒரே கட்டணத்தின் மூலம் ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரும் பார்த்துக் கொள்ளலாம். ஆனால் தியேட்டர்களுக்கு சென்றால் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக டிக்கெட் எடுக்க வேண்டும். எனவே இந்த கட்டணம் குறைவுதான் என சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஐமேக்ஸ் பார்மெட்டில் வெளியாகும் புஷ்பா 2… படக்குழு அறிவிப்பு!

விரைவில் உருவாகிறது ஸ்லம்டாக் மில்லியனர் 2… தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

அனைவரிடமும் வெற்றிடம் உள்ளது… திரைப்பட விழாவில் ரஹ்மான் பேச்சு!

திரையரங்குகளில் கண்டுகொள்ளப் படாத ‘பிளடி பெக்கர்’ ஓடிடி ரிலீஸாவது கவனம் பெறுமா?

ரஜினி பிறந்தநாளில் ஜெயிலர் 2 முதல் பார்வை.. ஷூட்டிங்குக்குத் தயாரான படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments