பொன்மகள் வந்தாள் நஷ்டம்… சூரரைப் போற்று விலையில் எதிரொலி!

Webdunia
புதன், 26 ஆகஸ்ட் 2020 (16:22 IST)
சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் கம்மியான விலைக்கு விற்கப்பட்டதற்கு பொன்மகள் வந்தாள் படத்தின் தோல்வியும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது.

நடிகர் சூர்யா நடித்து உருவாகியுள்ள திரைப்படம் “சூரரை போற்று”. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு பெரிய அளவிலான எதிர்பார்ப்புகள் இருந்து வந்த நிலையில் கொரோனா காரணமாக திரையரக்குகள் மூடப்பட்டுள்ளதால் படம் வெளியாவது ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் சூரரை போற்று திரைப்படம் அமேசான் பிரைமில் நேரடியாக வெளியாவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அக்டோபர் 30 ஆம் தேதி அமேசான் ப்ரைமில் இந்த படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை நடிகர் சூர்யாவும் உறுதிப்படுத்தியுள்ளார். 

இந்த படம் கிட்டத்தட்ட 45 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் சூர்யாவின் மார்க்கெட்டுக்கு இந்த விலை மிகவும் கம்மி எனவும் சொல்லப்படுகிறது. ஆனால் ஏற்கனவே சூர்யா தயாரித்து ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் படம் ஓடிடியில் ரிலிஸாகி வரவேற்பைப் பெறாததால் இந்த படத்தை கம்மியான விலைக்கு அந்த நிறுவனம் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்தடுத்து ஃபுல் ட்ரீட்தான்.. ‘ஜனநாயகன்’ படத்தின் டிரெய்லர் எப்போ தெரியுமா? அதுமட்டுமா?

யாஷிகா ஆனந்தின் வித்தியாசமான ஃபோட்டோஷூட் ஆல்பம்!

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் கலர்ஃபுல் கலெக்‌ஷன்ஸ்!

பைசன் இசையமைப்பாளரை ஹீரோவாக்கும் பா ரஞ்சித்!

சிம்பு & வெற்றிமாறனின் ‘அரசன்’ படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம்… காரணம் ஐசரி கணேஷா?

அடுத்த கட்டுரையில்
Show comments