கமல் மணிரத்னம் படத்தில் இருந்து சிம்பு விலகியது ஏன்?

Webdunia
வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (08:11 IST)
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன. ஆனால் முதல் பாகம் அளவுக்கு இரண்டாம் பாகம் பெரிதாக வசூல் செய்யவில்லை.

இந்நிலையில் மணிரத்னம் அடுத்து கமல்ஹாசன் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் மணிரத்னம். நாயகன் படத்துக்குப் பிறகு 35 ஆண்டுகள் கழித்து இருவரும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றுகிறார்கள். இந்த படத்தில் நடிகர் சிம்பு ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் இப்போது படத்தில் இருந்து அவர் வெளியேறிவிட்டதாக சொல்லப்படுகிறது. சிம்பு இப்போது தேசிங் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு நீண்ட தலைமுடியை வளர்த்து வருகிறார். ஆனால் மணிரத்னம் படத்தில் சிம்புவுக்கு மாவட்ட ஆட்சியர் வேடத்தை மணிரத்னம் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. அதனால் இப்போது இருக்கும் கெட்டப்போடு அந்த படத்தில் நடிக்க முடியாது என்பதால் அவர் படத்தில் இருந்து விலகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தயாரிப்பாளர்களின் செயலால் கடுப்பான தனுஷ்.. இதனால்தான் இளையராஜா பயோபிக் நிறுத்தப்பட்டதா?

ரவி மோகனின் ’ஜீனி’ படத்தின் ரிலீஸ் எப்போது?... வெளியான தகவல்!

தனுஷின் அடுத்த படத்தின் தயாரிப்பாளர் மாற்றமா?

லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தின் ஹீரோ அல்லு அர்ஜுனா?.. திடீர் ட்விஸ்ட்!

‘அஞ்சான்’ ரீரிலீஸில் சூர்யா இப்படி பண்ணலாமா? நம்பிக்கையை கைவிடாத லிங்குசாமி

அடுத்த கட்டுரையில்
Show comments