Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினிகாந்த் பாபாவை ரி ரிலீஸ் செய்ய என்ன காரணம்… இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா பகிர்ந்த் சீக்ரெட்!

Webdunia
சனி, 26 நவம்பர் 2022 (08:45 IST)
ரஜினிகாந்த் நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளியான பாபா திரைப்படம் படுதோல்வி படமாக அமைந்தது.

ரஜினிகாந்த் நடிப்பில், கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியாகி கலவையான விமர்சனங்கள் பெற்ற படம் பாபா. இப்படத்தை பாட்ஷா, வீரா படங்களை இயக்கிய சுரேஷ்கிருஷ்ணா இயக்கியிருந்தார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். ரஜினியே இப்படத்தை தயரித்திருந்தார்.

இந்த நிலையில் இப்படத்தை மீண்டும் வெளிய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இப்படத்திற்கு ரீ எடிட்டிங், ரீமிக்ஸ் பணிகள் நடந்து வருவதாகவும், விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்ற தகவல் வெளியாகிறது.

இந்நிலையில் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா அளித்துள்ள ஒரு நேர்காணலில் “ரஜினிகாந்த் திடீரென்று அழைத்து பாபா ரி ரிலீஸ் திட்டத்தை தெரிவித்தார். இப்போது காந்தாரா, பிரமாஸ்திரம் போன்ற பேண்டசி படங்கள் நல்லா ஹிட் ஆகின்றன. அதனால் நம் படத்தை இப்போது ரிலீஸ் செய்தால் நன்றாக இருக்கும் என்று கூறினார். இப்போது வேலைகள் விறுவிறுப்பாக நடக்கிறது. ரஜினி சாரின் பிறந்தநாளை குறிவைத்து வேலைகள் நடக்கின்றன” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

அடுத்த கட்டுரையில்
Show comments