’தளபதி 65’ பூஜையில் கலந்து கொள்ளாதது ஏன்? பூஜா ஹெக்டே விளக்கம்!

Webdunia
புதன், 31 மார்ச் 2021 (12:06 IST)
தளபதி விஜய் நடிக்கும் ’தளபதி 65’ படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற உள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த பூஜை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தெரிவிக்கவில்லை என்றாலும் இந்த படத்தின் நாயகி பூஜா ஹெக்டே ’தளபதி 65’ பட பூஜை நடந்ததை உறுதி செய்து உள்ளார் 
அவர் தனது டுவிட்டரில் ’தளபதி 65’ பட பூஜையில் இன்று என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. நான் வேறொரு படப்பிடிப்பில் இருந்தேன். அதனால்’தளபதி 65’ பட பூஜையில் கலந்து கொள்ள முடியாததற்கு வருந்துகிறேன். இருப்பினும் படக்குழுவினருடன் இணைந்து பணியாற்ற மிகவும் ஆர்வத்துடன் காத்திருக்கிறேன் என்று அவர் பதிவு செய்துள்ளார். பூஜா ஹெக்டேவின் இந்த டுவிட்டர் பதிவை அடுத்து ’தளபதி 65’ படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
விஜய், பூஜா ஹெக்டே உள்பட பலர் நடிக்கவுள்ள இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார் என்று குறிப்பிடத்தக்கது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாக இருக்கும் இந்த படத்தின் முக்கிய காட்சிகள் ரஷ்யாவில் படமாக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் கிளாமர் லுக் க்ளிக்ஸ்!

ரஜினி படத்தில் இருந்து விலகுகிறேன்… சுந்தர் சி திடீர் அறிவிப்பு!

பணமோசடி வழக்கு… இளம்பெண்ணின் தந்தை கொடுத்த புகாரில் ‘பிக்பாஸ்’ புகழ் தினேஷ் கைது?!

மீண்டும் இணையும் ராஜமௌலி & ஜூனியர் என் டி ஆர்… பயோபிக் படமா?

விஜய் சேதுபதி நடிப்பில் பாலாஜி தரணிதரன் இயக்கும் படத்தில் இவர்தான் ஹீரோயின்!

அடுத்த கட்டுரையில்
Show comments