Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தக் லைஃப் படத்தில் இருந்து ஜெயம் ரவி வெளியேற மணிரத்னத்தின் கஞ்சத் தனம்தான் காரணமா?

vinoth
செவ்வாய், 21 மே 2024 (11:31 IST)
கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் 'தக் லைஃப்'  படத்தின் ஷூட்டிங் தற்போது டெல்லியில் நடந்து வருகிறது.  இதில் கமல்ஹாசன், சிம்பு மற்றும் அபிராமி உள்ளிட்டவர்கள் நடித்து வருகிறார்கள். இந்த படத்தில் கமல்ஹாசனோடு திரிஷா, ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக், சிம்பு, அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் டெல்லியில் நடந்தது. அங்கு சில நாட்கள் நடந்த ஷூட்டிங்கை முடித்துவிட்டு சென்னை திரும்பியது படக்குழு.  இதையடுத்து படத்தின் அடுத்தகட்ட ஷூட்டிங் சென்னையில் நாளை தொடங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இங்கு 15 நாட்கள் முக்கியமான ஆக்‌ஷன் காட்சி படமாக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஜெயம் ரவி ஒப்பந்தம் ஆகியிருந்தார். ஆனால் பின்னர் அவர் சில காரணங்களால் அந்த படத்தில் இருந்து வெளியேறிவிட்டதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் இதுபற்றி வேறொரு தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நடிக்க ஜெயம் ரவி வழக்கமாக வாங்கும் சம்பளத்தைவிட, பலமடங்கு கம்மியான சம்பளத்தை மணிரத்னம் சொன்னதால்தான் அவர் வெளியேறிவிட்டதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நாம் தமிழர் கட்சியை தடை செய்ய வேண்டும்: தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்..!

ஹேப்பி மோடில் கீர்த்தி சுரேஷ்… அழகிய உடையில் ஸ்டன்னிங் போட்டோஷூட்!

பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கவுண்டமணியின் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பாண்டிராஜ் & விஜய் சேதுபதி படத்தில் இணையும் பிரபல மலையாள நடிகர்!

அடுத்த கட்டுரையில்
Show comments