பிடிவாதமாக இருந்த விஜய்… தளபதி 69 படத்தில் இருந்து பாகுபலி தயாரிப்பாளர் விலகியது ஏன்?

vinoth
புதன், 15 மே 2024 (07:39 IST)
நடிகர் விஜய், தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘The GOAT’  என்று படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்னும் சில நாட்களே பாக்கி உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்துக்குப் பிறகு இன்னும் ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு விஜய் அரசியலில் கவனம் செலுத்தப் போவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் அவரின் கடைசி படத்தை தயாரிக்க போவது பாகுபலி தயாரிப்பாளர் டிவிவி தானய்யா என்று சொல்லப்பட்டது. ஆனால் அவர் திடீரென்று படத்தில் இருந்து விலகியதாக சொல்லப்பட்டது.

இதற்குக் காரணம் விஜய்யின் சம்பளம்தானாம். அவர் இந்த படத்துக்காக 250 கோடி ரூபாய் சம்பளம் கேட்டுள்ளார். தானய்யா பேரம் பேசி கொஞ்சம் குறைக்கலாம் என நினைத்துள்ளார். ஆனால் விஜய் சம்பள விஷயத்தில் பிடிவாதமாக இருந்ததால், கணக்குப் போட்டு பார்த்து அவர் படத்தில் இருந்து விலகியுள்ளதாக சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்தடுத்து ஃபுல் ட்ரீட்தான்.. ‘ஜனநாயகன்’ படத்தின் டிரெய்லர் எப்போ தெரியுமா? அதுமட்டுமா?

யாஷிகா ஆனந்தின் வித்தியாசமான ஃபோட்டோஷூட் ஆல்பம்!

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் கலர்ஃபுல் கலெக்‌ஷன்ஸ்!

பைசன் இசையமைப்பாளரை ஹீரோவாக்கும் பா ரஞ்சித்!

சிம்பு & வெற்றிமாறனின் ‘அரசன்’ படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம்… காரணம் ஐசரி கணேஷா?

அடுத்த கட்டுரையில்
Show comments