பிரபாஸ் படத்தில் வில்லனாக நடிக்க சம்மதித்தது ஏன்?- கமல் விளக்கம்

Webdunia
புதன், 26 ஜூலை 2023 (13:47 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் கமல்ஹாசன். இவர் தற்போது, ஷங்கர் இயக்கத்தில்   ‘’இந்தியன் 2’’ படத்தில் நடித்து வருகிறார்.  இப்படத்தை அடுத்து, வினோத் இயக்கத்தில்  ‘’கமல்233’’ படத்தில் நடிக்கவுள்ளார்.

இதற்கிடையே   தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் பிரபாஸ் நடிப்பில்  ரூ.600 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகவுள்ள ‘கல்கி 2898AD’ என்ற படத்தில் கமல்ஹாசன் வில்லனாக நடிக்க  ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படத்தில் இவர்களுடன் இணைந்து, அமிதாபச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சமீபத்தில், அமெரிக்காவில்  ’புரொஜக்ட் கே’ என்ற படத்தின்  கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலானது.

30 ஆம் நூற்றாண்டு படமாக உருவாக  உள்ள இப்படம்  கல்கி அவதார நிகழ்ச்சியின் கதை அம்சம் கொண்டதாக கூறப்படுகிறது. நடிகையர் திலகம் உள்ளிட்ட படங்களை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கத்தில் வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு  சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இந்த நிலையில், இப்படத்தில் வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டது பற்றி கமல்ஹாசன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: ‘’புராணங்களின் பெருமையை பறை சாற்றுவதற்காக நாக் அஸ்வின் கல்கி2989ஏ.டி. என்ற படத்தை இயக்குகிறார். ஒரு படத்திற்கு கதாநாயகன் எவ்வளவு முக்கியமோ, வில்லனும் அதே அளவுக்கு முக்கியம் என்பதால் இப்படத்தில் வில்லனாக நடிக்க சம்மதித்தேன்’’ என்று கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘வாரணாசி’க்கு டஃப் கொடுத்த நம்மூர் ஹீரோக்கள்! முரட்டுக்காளை ரஜினியை மறந்துட்டீங்களா?

அடுத்த விஜய்சேதுபதி இவர்தான்.. அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தில் இவரா? இதோ சூப்பரான அப்டேட்

அஜித் படத்தில் எனக்கு இருந்த ஒரே வருத்தம்.. ரொம்ப நாளைக்கு பிறகு ஃபீல் பண்ணும் நடிகை

நடிகர் பிரேம்ஜி அமரனுக்கு பெண் குழந்தை.. குவியும் திரையுலகினர்களின் வாழ்த்து..!

அந்தக் கருமத்தை ஏன் பாக்குறீங்க? பிக்பாஸ் குறித்த கேள்விக்கு கடுப்பான மன்சூர்அலிகான்

அடுத்த கட்டுரையில்
Show comments