அய்யப்பனும் கோஷியும் தமிழ் ரீமேக்… எல்லா நடிகரும் அந்த கதாபாத்திரத்தில் மட்டுமே நடிக்கணுமாம்!

Webdunia
வெள்ளி, 20 நவம்பர் 2020 (19:06 IST)
அய்யப்பனும் கோஷியும் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் எல்லோருமே அய்யப்பன் கதாபாத்திரத்தில் மட்டுமே நடிக்க ஆசைப்படுவதாக சொல்லப்படுகிறது.

மலையாளத்தில் பிருத்விராஜ் மற்றும் பிஜு மேனன் என்ற இரு முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்து இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான திரைப்படம் அய்யப்பனும் கோஷியும். மலையாளத்தின் பிரபலமான திரைக்கதை எழுத்தாளர் சாச்சி இயக்கிய முதல் திரைப்படமான இது அங்கே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அத்திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியாகி தமிழ்நாட்டிலும் கவனம் ஈர்த்தது. போலிஸ் அதிகாரி ஒருவருக்கும் ராணுவ வீரர் ஒருவருக்கும் இடையே ஏற்படும் மிகச்சிறிய மோதல் எந்த அளவுக்கு சென்று இருவரின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதே கதை.

இந்த படத்தின் தெலுங்கு ரீமேக் தொடங்கி படப்பிடிப்பு நடந்து வருகிறது. அதே நேரத்தில் தமிழ் ரீமேக் பற்றி முன்னரே அறிவிப்பு வெளியான போதும் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதற்குக் காரணம் கதை கேட்கும் எல்லா கதாநாயகர்களும் பிஜு மேனன் நடித்த அய்யப்பன் கதாபாத்திரத்தில் மட்டுமே நடிக்க ஆர்வம் காட்டுவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

23 ஆண்டுகளுக்குப் பிறகு களம் கண்ட அஜித்குமார்: மலேசிய ரேஸிங் அனுபவம் குறித்து நெகிழ்ச்சி

சரத்குமார்தான் சிறந்த நடிகர்! இவர எந்த லிஸ்ட்ல சேர்க்குறது? ராஜகுமாரனின் அடுத்த எபிசோடு

உலகப் புகழ்பெற்ற வார்னர் பிரதர்ஸ்-ஐ விலைக்கு வாங்கிய நெட்ஃபிளிக்ஸ்.. எத்தனை லட்சம் கோடி?

சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் ஒரே தடையும் நீங்கியது.. இந்த தேதியில் ரிலீசா?

திடீரென அமெரிக்கா சென்ற சிவகார்த்திகேயன்.. அட்லி படம் போல் பிரமாண்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments