Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷின் ‘மாரி 2’ படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியுமா?

Webdunia
செவ்வாய், 26 டிசம்பர் 2017 (09:38 IST)
தனுஷ் நடிக்கும் ‘மாரி 2’ படத்துக்கு யார் இசையமைக்கிறார் என்ற விவரம் தெரியவந்துள்ளது.



பாலாஜி மோகன் இயக்கத்தில் தயாராகிவரும் படம் ‘மாரி 2’. ஏற்கெனவே ரிலீஸான ‘மாரி’ படத்தின் இரண்டாம் பாகம் இது. தனுஷ் ஹீரோவாக நடிக்க, சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்கிறார். ரோபோ சங்கர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.
 
‘மாரி’ படத்தின் வெற்றிக்கு, அனிருத்தின் இசையும் மிக முக்கிய காரணம். ஆனால், தற்போது தனுஷும், அனிருத்தும் பேசிக் கொள்வதில்லை. எனவேதான் ‘விஐபி 2’ படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்தார். ஆனால், அது ‘விஐபி’ முதல் பாகம் அளவுக்கு இல்லை. எனவே, ‘மாரி 2’ படத்துக்கு யார் இசையமைப்பது என்ற கேள்வி எழுந்தது.
 
இந்நிலையில், ‘மாரி 2’ படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. தனுஷ் அறிமுகமான ‘துள்ளுவதோ இளமை’ படத்துக்கு இசையமைத்தவர் யுவன் சங்கர் ராஜா. தொடர்ந்து, ‘காதல் கொண்டேன்’, ‘யாரடி நீ மோகினி’ உள்ளிட்ட சில படங்களுக்கு இசையமைத்துள்ளார்.கிட்டத்தட்ட 10 வருடங்கள் கழித்து இருவரும் இணைகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments