Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விக்ரம் படத்தை இயக்குவது யார்?

விக்ரம் படத்தை இயக்குவது யார்?

விக்ரம் படத்தை இயக்குவது யார்?
, செவ்வாய், 18 அக்டோபர் 2016 (11:26 IST)
விக்ரமின் அடுத்தப் படத்தை யார் இயக்குவது என்ற குழப்பம் நீடிக்கிறது. இருமுகனுக்குப் பிறகு பிரம்மன் இயக்குனர் சாக்ரடீஸ் இயக்கத்தில் விக்ரம் நடிப்பதாக இருந்தது. இந்நிலையில், சாமி 2 அறிவிப்பை ஹரி வெளியிட, சாக்ரடீஸ் படத்தை விக்ரம் ஓரமாக ஒதுக்கி வைத்தார். சாமி 2 படத்தில்தான் விக்ரம் அடுத்து நடிப்பார் என கூறப்பட்டது.

 
எஸ் 3 படத்தை முடித்து ஹரி சாமி 2 படத்துக்கு வர இன்னும் நாள்களாகும் என்பதால் அதற்கு முன் ஒரு படத்தில் நடிக்க விக்ரம் திட்டமிட்டுள்ளார். இந்தப் படத்தை யார் இயக்குவார்கள் என்ற குழப்பம் இப்போதும் நீடிக்கிறது. அருண் குமார், சாக்ரடீஸ், மகிழ் திருமேனி என பல பெயர்கள் பட்டியலில் உள்ளன. 
 
அதேநேரம், இருமுகன் படத்தின் இயக்குனர் ஆனந்த் சங்கருக்கு விக்ரம் மீண்டும் வாய்ப்பு வழங்க தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அக்டோபரில் ஆடியோ, நவம்பரில் வெளியாகிறது கடவுள் இருக்கான் குமாரு