அஜித்தின் அடுத்த பட இயக்குநர் யார்?

Webdunia
சனி, 17 பிப்ரவரி 2018 (16:49 IST)
அஜித்தின் அடுத்த பட இயக்குநர் யார் என்பது குறித்து இப்போதே விவாதங்கள் தொடங்கிவிட்டன.

 
சிவா இயக்கத்தில் அஜித் நான்காவது முறையாக நடிக்கும் படம் ‘விஸ்வாசம்’. நயன்தாரா அஜித்துக்கு ஜோடியாக நடிக்கும் இந்தப் படத்துக்கு, டி.இமான் இசையமைக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படம், இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்து பிரபுதேவா இயக்கத்தில் அஜித் நடிக்கலாம் என்கிறார்கள். அஜித்தைச் சந்தித்து பிரபுதேவா கதை சொல்லிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
 
அதேசமயம், ‘விஸ்வாசம்’ படத்தில் நயன்தாரா நடிக்க ஒப்புக் கொண்டதும் காரணமாகத்தான் என்று கூறப்படுகிறது. இதைவைத்து நயன்தாரா தயாரிக்கும் படத்தில் அஜித்தை ஹீரோவாக நடிக்க வைக்கலாம் என்றும், அந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்னை வெளிய போக சொல்ல நீங்க யாரு! திவ்யாவிடம் எகிறிய வாட்டர்மெலன்! Biggboss-ல் ட்விஸ்ட்!

ரித்திகா சிங்கின் வைரல் க்யூட் க்ளிக்ஸ்!

பிக்பாஸ் லாஸ்லியாவின் வைரல் க்யூட் போட்டோஸ்!

மாரி செல்வராஜின் மாயாஜால உலகில் தனுஷ்… ‘தனுஷ் 56’ பட அப்டேட்!

சேரனின் ‘ஆட்டோகிராஃப்’ படத்தின் ரி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments