பங்கி ஜம்பிங் விளையாடியபோது விபத்தில் சிக்கிய பிரபல நடிகை!

Webdunia
புதன், 21 மார்ச் 2018 (13:25 IST)
பாலிவுட் நடிகை நடாஷா சுரி பங்கி ஜம்பிங் செய்தபோது ஏற்பட்ட விபத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அழகிப் பட்டம் வென்ற நடாஷா சுரி படங்கள், வெப் சீரீஸ்களில் நடித்து வருகிறார். பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வரும் அவர் பிரபல  நிறுவனமொன்றின் கடைதிறப்பு விழா ஒன்றிற்காக சமீபத்தில் இந்தோனேஷியா சென்றார். கடையை திறந்து வைத்த உடனே அவர் இந்தியா திரும்பவில்லை. 
 
இந்தோனேசியாவில் உள்ள சுற்றுலாத்தலங்களை சுற்றிப் பார்த்த அவர், அப்படியே பங்கி ஜம்பிங் செய்துள்ளார். அவர் அதில் தலை கீழாக குதித்தபோது கயிறு அறுந்து விழுந்தது. இதனால் ஆற்றில் தலைக்குப்புற விழுந்தார். உடனே அவரை அருகில் உள்ள மருத்துவனையில் அனுமதித்துள்ளனர்.
 
இந்நிலையில் தலைகீழாக விழுந்ததால் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடாஷா 24 மணிநேர நேரடிக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘அஞ்சான்’ ரீரிலீஸ்.. சூர்யா என்ன சொன்னார்? மேடையில் கடுப்பான லிங்குசாமி

சினிமாவில் இருந்து விலகுகிறேன்: ’சென்னை 28' நடிகை அறிவிப்பு.. என்ன காரணம்?

ரிவால்வர் ரீட்டாவாகவே மாறிய கீர்த்தி சுரேஷ்… விண்டேஜ் ட்ரஸ்ஸில் கூல் க்ளிக்ஸ்!

இசைக் கச்சேரியில் ஜொலிக்கும் உடையில் கலக்கும் ஆண்ட்ரியா… அசத்தல் க்ளிக்ஸ்!

வழக்கமாக சூப்பர் ஸ்டார்களின் படங்களில் ஹீரோயின்களுக்கு வேலை இருக்காது, ஆனால் … மாளவிகா மோகனன் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments