Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாஸா? தமாஸா? பேட்ட, விஸ்வாசத்திற்கு காத்திருக்கும் சவால்கள்!!

Webdunia
புதன், 9 ஜனவரி 2019 (14:57 IST)
பேட்ட, விஸ்வாசம் படங்கள் எப்படி இருக்கபோகிறது என்ற தீவிர எதிர்பார்ப்பில் காத்துக்கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள்.
பேட்ட மற்றும் விஸ்வாசம் ஆகிய இரு படங்களும் நாளை வெளியாக உள்ளது. ரஜினி படமும் அஜித் படமும் நேரடியாக மோதுவது இதுவே முதல்முறை. பேட்ட படத்த்தின் டிரைலர் கடந்த 28 ஆம் தேதி வெளியானது. அதில் ரஜினி பேசிய சில வசனங்கள் அஜித்தின் விஸ்வாசம் படத்தை தாக்கி பேசியதாக அஜித்தின் ரசிகர்கள் கொதித்தெழுந்தனர்.
 
இதனையடுத்து  டிசம்பர் 30 ஆம் தேதி வந்தது விஸ்வாசம் டிரைலர். அதில் அஜித் பேசிய சில வசனங்கள் பேட்ட டிரைலரில் ரஜினி பேசிய வசனங்களுக்குக் கௌண்ட்டராக அமைந்ததால் டிரைலர் வைரல் ஆனது. இதனால் சமூகவலைதளங்களில் அஜித் ரசிகர்களும், ரஜினி ரசிகர்களும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி பேசி வருகின்றனர்.
 
சிவாஜிக்கு பிறகு ரஜினி நடிப்பில் வெளியான எந்திரன் நன்றாக இருந்தது. ஆனாலும் அதில் ரஜினியின் வழக்கமான மாஸ் இல்லை. அதன்பின்னர் வெளியான கபாலி, காலா, 2.0 ஆகிய திரைப்படங்களில் ரஜினிக்கே உரித்தான மாஸ் இல்லை. இதனால் ரசிகர்கள் மிகவும் ஏமாந்து போய்விட்டனர். ஆனால் பேட்ட படத்தை பொறுத்தவரையில் படத்தின் டிரைலரே பக்கா மாஸாக இருந்தது. அந்த கால ரஜினியை பார்த்தது போல இருந்தது.
 
அதேபோல் அஜித் நடிப்பில் வெளியான வேதாளம், விவேகம் ஆகிய படங்கள் ரொம்ப சுமார் தான். ஆனால் விஸ்வாசம் படத்தின் டிரைலரையும், பஞ்ச் டைலாக்கையும் பார்த்தால், இந்த படம் அஜித் ரசிகர்களுக்கு விருந்தளிப்பது போல தான் உள்ளது.
 
பொங்கல் ரேசில் களமிறக்கப்பட்டுள்ள இவ்விரு படங்கள், ரசிகர்களின் நீண்ட நாள் தாகத்தை போக்கப்போகிறதா இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

தனி ஒருவன் 2 ப்ரோஜக்ட் கை விட்டு போயும் இயக்குனருக்கு ஹாப்பிதான்..! அஜித் தான் காரணம்!.

இயக்குனர் பா.ரஞ்சித் மீது போலீசில் புகார்.. சாதி மோதலை தூண்டுகிறார் என குற்றச்சாட்டு..!

தஞ்சாவூர் பிண்ணனியில் 90ஸ் காலத்து கதை! – கார்த்தியின் ‘மெய்யழகன்’ ஃபர்ஸ்ட்லுக்!

தனுஷின் ‘ராயன்’ படத்தின் ‘வாட்டர் பாக்கெட்’ பாடல்.. செம்ம வைரல்..!

இதெல்லாம் நடக்குற காரியமாங்க..! ஏ.வி.எம் நிறுவனத்திற்கு எம்.ஜி.ஆர் விட்ட சவால்..!

அடுத்த கட்டுரையில்
Show comments