Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷ் கமிட்டாகியிருக்கும் புதுப்படங்கள் எவையெவை தெரியுமா?

Webdunia
செவ்வாய், 29 மே 2018 (15:25 IST)
தனுஷ் கமிட்டாகியிருக்கும் புதுப்படங்களின் லிஸ்ட் கிடைத்திருக்கிறது.
தனுஷ் நடித்துள்ள ஹாலிவுட் படமான ‘த எக்ஸார்டினரி ஜர்னி ஆப் த பக்கிர்’ படம் நாளை ரிலீஸாக இருக்கிறது. ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் தயாராகியுள்ள இந்தப் படத்தின் புரமோஷனுக்காக தற்போது வெளிநாட்டில் இருக்கிறார் தனுஷ். சென்னை வந்தபிறகு ‘மாரி 2’, ‘வடசென்னை’ ஆகிய படங்களின் மீதமுள்ள காட்சிகளில் நடிக்க இருக்கிறார். இவை தவிர, கெளதம் மேனனின் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சி வேறு பாக்கியிருக்கிறது.
இவற்றை முடித்துக் கொடுத்துவிட்டு, ஆகஸ்ட் மாதம் தன்னுடைய டைரக்‌ஷனில் இரண்டாவது படத்தைத் தொடங்க இருக்கிறார் தனுஷ். அதன்பிறகு ‘ராஞ்ஹெனா’ ஹிந்திப் படத்தை இயக்கிய ஆனந்த் எல் ராய்க்கு மறுபடியும் கால்ஷீட் கொடுத்துள்ளார். அதைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்கப் போகிறார். இவை மூன்றும் முடிந்தபிறகு, ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் மூன்றாம் பாகத்தில்
நடிக்கப் போகிறாராம். இதை யார் இயக்கப் போகிறார் எனத் தெரியவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கடைசி நேரத்தில் 8 நிமிடங்கள் காட்சி நீக்கப்பட்டது: ‘விடுதலை 2’ குறித்து வெற்றிமாறன்..!

கிறிஸ்டோஃபர் நோலனுக்கு சர் பட்டம் வழங்கி கௌரவித்த பிரிட்டன் மன்னர்!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கண்கவர் புகைப்பட ஆல்பம்!

க்யூட் போஸில் கலக்கும் ‘பாபநாசம்’ புகழ் எஸ்தர்!

இந்தியன் 3 ஓடிடியில் ரிலீஸ் ஆகுமா?... இயக்குனர் ஷங்கர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments