Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

என்னது... நான் வில்லனா?

என்னது... நான் வில்லனா?

என்னது... நான் வில்லனா?
, செவ்வாய், 24 மே 2016 (10:22 IST)
தனுஷ் நடிக்கும், என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தை கௌதம் இயக்கி வருகிறார். சமீபத்தில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டனர்.


 
 
இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க சரியான ஆள் அமையவில்லை. வில்லன் கதாபாத்திரத்துக்கு யாரும் செட்டாகாததால் தானே வில்லனாக நடிப்பது என கௌதம் முடிவு செய்திருப்பதாக போகிற போக்கில் யாரோ கிளப்பிவிட்டனர். மறுநாளிலிருந்து பல ஊடகங்களில் அதுதான் தலைப்பு செய்தி. 'கௌதம் சொந்தப் படத்துக்கே வில்லனானார்.'
 
ஆனால், இந்த வதந்தியை கௌதம் மறுத்துள்ளார். என்னை நோக்கி பாயும் தோட்டாவில் நான் நடிக்கவில்லை என அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கடல் கடக்கும் கடம்பன்