Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்யா-சாயிஷா திருமண தேதி அறிவிப்பு

Webdunia
வியாழன், 31 ஜனவரி 2019 (06:31 IST)
தமிழ் திரையுலகில் இளம் நடிகர்களில் ஒருவராகிய ஆர்யாவுக்கு விரைவில் திருமணம் என்ற செய்தி கடந்த சில ஆண்டுகளாகவே வெளிவந்தது. இதற்காக ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்தியும் அதிலும் பெண் அமையவில்லை
 
இந்த நிலையில் நடிகை சாயிஷாவை ஆர்யா திருமணம் செய்யவுள்ளதாக அவ்வப்போது வதந்திகள் வெளிவந்த நிலையில் தற்போது இந்த வதந்தி உண்மையாகியுள்ளது. இருவரும் இணைந்து 'கஜினிகாந்த்' திரைப்படத்தில் நடித்தபோது காதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது.
 
ஆர்யா, சாயிஷா திருமணம் குறித்து இருவீட்டார்களும் பேசி முடிவெடுத்துள்ளதாகவும், வரும் மார்ச் 9 மற்றும் 10 ஆகிய இரண்டு நாட்கள் இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த திருமணத்திற்கு தமிழ் திரையுலகமே திரண்டு வந்து வாழ்த்து தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஆர்யாவின் நெருங்கிய நண்பர் விஷாலின் திருமண தேதியும் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி, கார்த்தி வரிசையில் அர்ஜூன் பட டைட்டிலில் சிவகார்த்திகேயன்! - மதராஸி First Look Poster!

பொய் செய்தி.. எந்த விபத்தும் ஏற்படவில்லை.. நலமாக இருக்கிறேன்: யோகிபாபு

நடிகர் யோகிபாபு சென்ற கார் விபத்து.. திரையுலகினர் அதிர்ச்சி..!

மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்