Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எமோஷன், ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் அதிக எண்டர்டெயின்மெண்ட்டோடு ‘வெப்பன்’ திரைப்படம் உருவாகி இருக்கிறது - நடிகர் வசந்த் ரவி!

J.Durai
செவ்வாய், 4 ஜூன் 2024 (12:35 IST)
நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து, தனது இயல்பான நடிப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் பெயர் பெற்றவர் நடிகர் வசந்த் ரவி. குகன் சென்னியப்பன் இயக்கத்தில் இவர் நடித்திருக்கும் ‘வெப்பன்’ திரைப்படம் ஜூன் 7, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. 
 
படம் குறித்து நடிகர் வசந்த் ரவி கூறும்போது, ”’வெப்பன்’ திரைப்படத்தின் விஷுவல் புரோமோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த அபரிதமான வரவேற்பு எங்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. படத்தையும் பார்வையாளர்கள் பாராட்டுவார்கள் என்று முழுமையாக நம்புகிறோம். எமோஷன்ஸ், அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் எண்டர்டெயின்மெண்ட் ஆகியவற்றின் கலவையாக படம் தொடங்கியதில் இருந்து இறுதி வரை பார்வையாளர்களை நிச்சயம் இந்தப் படம் மகிழ்விக்கும். ஒரு நடிகராக நான் எப்போதும் தனித்துவமான கதாபாத்திரங்களில் நடித்து எனது நடிப்புத் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புவேன். அந்த வாய்ப்பு ‘வெப்பன்’ படத்தில் நடந்திருப்பது மிக்க மகிழ்ச்சி. இந்த வாய்ப்புக்காக மில்லியன் ஸ்டுடியோவின் தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர் குகன் சென்னியப்பனுக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
 
’வெப்பன்’ பற்றி நிறைய விஷயங்களை பேச வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால், அது படம் பற்றிய ஸ்பாய்லராக மாறிவிடும். உலகளாவிய பார்வையாளர்களுக்கு இந்தப் படம் திரையரங்குகளில் நல்ல அனுபவத்தைக் கொடுக்கும் என்று நான் உறுதியளிக்கிறேன். இந்தியத் திரையுலகின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவரான நடிகர் சத்யராஜ் சாருடன் இந்தப் படத்தில் பணியாற்றுவது பெருமையாக இருக்கிறது” 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மருத்துவமனையில் அஜித் மனைவி ஷாலினி.. அவரே வெளியிட்ட புகைப்படம்..!

ரஜினியின் ‘கூலி’ படத்தில் இணைந்த பிரபலம்.. லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு..!

ஹாட் லுக்கிங் போட்டோ ஆல்பத்தைப் பகிர்ந்த திஷா பதானி!

மஞ்சக் காட்டு மைனாவான ரகுல் ப்ரீத் சிங்… கண்கவர் ஆல்பம்!

நிகில் சித்தார்த்தா நடிப்பில்,ராம் வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான 'தி இந்தியா ஹவுஸ்' படத்தின் தொடக்க விழா

அடுத்த கட்டுரையில்
Show comments