Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

த்ரிஷாவை கன்சிடரே பண்ணலை

த்ரிஷாவை கன்சிடரே பண்ணலை
, செவ்வாய், 27 மே 2014 (13:49 IST)
நலன் குமாராசாமி எஸ்கிமோ காதல் என்ற ஸ்கிரிப்டை தயாராக வைத்துள்ளார். சூது கவ்வும் முடிந்ததுமே இந்த ஸ்கிரிப்டை அவர் தயார் செய்துவிட்டார். கொரிய படம் மை டியர் டெஸ்பரடோவின் தழுவல்தான் இந்த எஸ்கிமோ காதல்.
சூர்யாதான் இந்த ஸ்கிரிப்டில் நடிப்பதாக இருந்தது. முருகதாஸ் படம் கிடைத்ததும் அவர் தயக்கம் காட்ட எஸ்கிமோ காதல் விஜய் சேதுபதிக்கு என்று சேப்டி செய்துவிட்டார். அடுத்த வருடம் படம் தொடங்குகிறது.
 
இந்தப் படத்தில் த்ரிஷா நடிக்கிறார் என்று எப்படியோ செய்தி வெளியாகி அது நலனின் காதுவரை சென்றது. அதனை உடனடியாக அவர் மறுத்துள்ளார். த்ரிஷாவை நாங்கள் கன்சிடர் கூட செய்யவில்லை என தனது விளக்கத்தில் கூறியிருக்கிறார்.
 
எஸ்கிமோ காதல் அடுத்த வருடம்தான் என்று முடிவானதால் அதற்கு முன் ஒரு த்ரில்லரை இயக்கவிருக்கிறார். சி.வி.குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் படத்தை தயாரிக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil