Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''உங்க ஸ்பீச்ச ரொம்ப மிஸ் பண்ண போறோம் விஜய் சார்''....பிரபல நடிகை

Webdunia
புதன், 27 செப்டம்பர் 2023 (12:36 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்  விஜய். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள படம் லியோ.  இப்படத்தை லலித்குமார் தயாரித்துள்ளார்.
 

இந்த படத்தில் விஜய்யுடன் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா என ஏகப்பட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.  படத்தின் ரன்னிங் டைம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. படம் 2 மணிநேரம் 39 நிமிடங்கள் ஓடும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி செப்டம்பர் 30 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடக்கும் என தகவல்கள் வெளியாகின. அதற்கான மேடை அமைக்கும் பணிகள் எல்லாம் நடந்து வந்த நிலையில்  இசை வெளியீட்டு விழாவை நடத்தப் போவதில்லை என தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

நேற்றிரவு லியோ படத் தயாரிப்பாளார் தன் டுவிட்டர் பக்கத்தில்,  “அதிகளவிலான பாஸ்களுக்கு வரும் கோரிக்கைகள் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக  நாங்கள் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியை நடத்த வேண்டாம் என முடிவெடுத்துள்ளோம். ரசிகர்களின் ஆசைக்காக நாங்கள் படத்தின் அப்டேட்களை தொடர்ந்து வெளியிடுவோம். அரசியல் காரணங்களாலோ அல்லது பிற அழுத்தங்களாலோ இந்த முடிவை நாங்கள் எடுக்கவில்லை.” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில்,  பிரபல நடிகை ஷனம் ஷெட்டி தன் டுவிட்டர் பக்கத்தில்,  ‘’உங்கள் ஸ்பீச்சை ரொம்ப மிஸ் பண்ண போறோம் விஜய் சார்… கூட்டத்தை கட்டுப்படுத்துவது கடினம் என்பதால் தயாரிப்பு நிறுவனம் இந்த முடிவெடுத்துள்ளது’’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சன் டிவியில் ஆங்கராக மாறிய ‘குக் வித் கோமாளி’ ஷிவாங்கி.. என்ன நிகழ்ச்சி?

‘சிறகடிக்க ஆசை’ வெற்றி வசந்த் மனைவிக்கு விபத்து: அதிர்ச்சி தகவல்..!

காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கிளாமர் உடையில் ஜான்வி கபூரின் அழகிய புகைப்பட தொகுப்பு!

நீங்க போட்டுகிட்டே இருங்க… நாங்க பாத்துகிட்டே இருப்போம் – சாதனைப் படைத்த மகேஷ் பாபுவின் படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments