Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்பானிஷ் பாடலை அசால்ட்டா பாடி அசத்தும் டிடி - கியூட் வீடியோ!

Webdunia
வெள்ளி, 17 ஏப்ரல் 2020 (08:52 IST)
விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ஹீரோயின் ரேஞ்சுக்கு உச்சத்தை தொட்டவர்   டிடி. அந்த நிகழ்ச்சிகளில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து தற்போது ஒருசில படங்களிலும் நடித்து வருகிறார். காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலம் பெரும் பிரபலமான இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தனது தொகுப்பாளர் பணியை செய்து வருகிறார். எவ்வளவு பெரிய உச்ச நடிகராக இருந்தாலும் எந்த வித பயமும் இன்றி பட படவென அனல் பறக்கும் ரேப்பிட் பஃயர் கேள்விகளை கேட்டு உச்ச நடிகர்களை திக்குமுக்காட செய்திடுவார் டிடி.

சினிமா உலகை பொறுத்தவரையில் திறமைக்கு ஏற்ற அளவுக்கு அழகும் தேவை. அந்த விஷயத்தில் டிடி தன் திறமைக்கு ஏற்றவாறே பார்ப்பதற்கு அழகான முகபாவனையும் கொண்டிருப்பவர். விஜய் டிவியில் எத்தனையோ தொகுப்பாளினிகள் இருந்தாலும் ரசிகர்களின் என்றும் பேவரைட் தொகுப்பாளினியாக இருந்து வருவது டிடி தான். தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் speed Get Set Go என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் டிடி அடிக்கடி தனது புகைபடங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராமில் ஸ்பானிஷ்  மொழியில் "Bella Ciao" என்ற சூப்பர் ஹிட் பாடலை பாடி அசத்திய வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த பாடல் சமீபத்தில் உலகம் முழுக்க மாபெரும் பிரபலமடைந்த "Money Hiest" என்ற வெப் தொடரில் இடம்பெற்றிருந்தது. இந்த வெப் சீரிஸில் நடித்த அனைவருக்கும் டிடி நன்றி தெரிவித்து இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Learning a few words in a foreign language is a sign of

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் முக்கிய நபர் தூக்கில் தொங்கி தற்கொலை.. அதிர்ச்சி தகவல்..!

முதல் நாள் திரைப்பட விமர்சனங்களுக்கு தடை விதிக்க முடியாது! - நீதிமன்ற உத்தரவால் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி!

ஜேசன் சஞ்சய் படத்தில் இருந்து விஜய் விலகி இருக்கக் காரணம் என்ன?

சென்னையில் இன்று தொடங்கியது ஜெயிலர் 2 ப்ரமோஷன் ஷூட்!

லேடி சூப்பர் ஸ்டாரை இயக்கும் அண்ணாச்சி பட இயக்குனர்!

அடுத்த கட்டுரையில்
Show comments