Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளிநாட்டில் மறுபடியும் அஜித் பட ஷூட்டிங்

Webdunia
வியாழன், 22 ஜூன் 2017 (13:18 IST)
அஜித் நடித்துவரும் ‘விவேகம்’ படத்தின் ஷூட்டிங், இன்னும் முடியவில்லை.


 


சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படம் ‘விவேகம்’. இந்தப் படத்தின் பெரும்பான்மையான படப்பிடிப்பு, வெளிநாட்டில் தான் நடந்தது. ஐரோப்பாவில் கிட்டத்தட்ட 150 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியவர்கள், கடந்த மாதம் தான் சென்னை திரும்பினார்கள். இங்கு, பேட்ச் ஒர்க் ஷூட் செய்யப்பட்டு, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், செர்பியாவுக்கு மறுபடியும் ஷூட்டிங் போயிருக்கிறார்கள். அங்கு ஷூட்டிங் நடந்தபோது விவேக் ஓபராய்க்கு அடிபட்டதால், சில காட்சிகளை எடுக்க முடியவில்லையாம். அதை எடுப்பதற்காக மறுபடியும் செர்பியா சென்றிருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. அஜித் – விவேக் ஓபராய் சம்பந்தப்பட்ட இந்தக் காட்சிகள், ஒரு வாரத்தில் படம்பிடிக்கப்பட்டுவிடும் என்று தெரிவித்துள்ளனர்.

காஜல் அகர்வால் அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ள இந்தப் படத்தில், அக்ஷரா ஹாசன் மற்றும் விவேக் ஓபராய் இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு, அனிருத் இசையமைக்கிறார். ஆகஸ்ட் 10ஆம் தேதி படம் ரிலீஸாகும் எனத் தெரிகிறது.

 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

5 வருடங்களாக கிடப்பில் இருந்த 'சுமோ' ரிலீஸ் தகவல்.. வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் அறிவிப்பு..!

சூர்யாவின் 45வது படத்தை இயக்குவது இந்த காமெடி நடிகரா? ஆச்சரிய தகவல்..!

சென்னையின் முக்கிய பகுதிக்கு ‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர்’ என்ற பெயர்: எஸ்பிபி சரண் மனு!

வெண்ணிற ஆடையில் எஸ்தர் அனிலின் அழகிய புகைப்பட தொகுப்பு!

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments