Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த முறை கட்டாயம் உண்டு; அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்திய சிவா

Webdunia
திங்கள், 14 ஆகஸ்ட் 2017 (10:54 IST)
அஜித் நடிப்பில் வெளிவர உள்ள விவேகம் படத்தின் டிரைலர் வெளியீடு தேதியை இயக்குநர் சிவா நாளை அறிவிக்க உள்ள நிலையில் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.


 

 
அஜித் நடிப்பில் வரும் 24ஆம் தேதி வெளிவர உள்ள விவேகம் படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. சிவா இயக்கத்தில் அஜித் மூன்றாவது முறையாக நடித்திருக்கும் படம் விவேகம். வீரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து வேதாளம் வெளிவந்தது. இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற மீண்டும் கூட்டணி அமைத்தனர் சிவா - அஜித். 
 
தற்போது விவேகம் படத்தின் டீஸர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் விவேகம் டிரைலரை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலோடு உள்ளனர். வேதாளம் படத்தின் டிரைலர் வெளியாகாமலே படம் வெளியானது குறிப்பிடத்தக்கது. 
 
ஆனால் இந்த முறை டிரைலர் வெளியாவது உறுதி. இதனை படத்தின் ஏடிடர் உறுதி செய்தார். மேலும் இயக்குநர் சிவா டிரைலர் வெளியீடு தேதியை நாளை அறிவிக்க உள்ளார். இதனால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’கூலி’ தான் கடைசி படம்.. ரெட் ஜெயண்ட் எடுத்த அதிரடி முடிவு?

அஜித்தின் அடுத்த படத்தை அவரே தயாரிக்கின்றாரா? சொந்த காசை செலவு செய்வதால் ஏற்பட்ட சந்தேகம்..!

ரஜினிக்கு கதை சொல்லியுள்ள 4 இயக்குனர்கள்.. யாருக்கு வாய்ப்பு கிடைக்கும்?

'மார்கன்' திரைப்படம் மூலம் விஜய் ஆண்டனிக்கு வெற்றி கிடைத்ததா? திரை விமர்சனம்

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கண்ணப்பா’ தேறியதா? திரை விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments