Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளிப் போட்டியில் இருந்து விலகிய ‘விசுவாசம்’

Webdunia
வெள்ளி, 29 ஜூன் 2018 (16:09 IST)
தீபாவளிப் போட்டியில் இருந்து அஜித்தின் ‘விசுவாசம்’ படம் விலகியிருக்கிறது.
சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படம் ‘விசுவாசம்’. ‘விவேகம்’ படத்தைத் தயாரித்த சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, டி.இமான் இசையமைக்கிறார். அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.
 
இந்தப் படத்தை அறிவிக்கும்போது, ‘தீபாவளி ரிலீஸ்’ என்றுதான் அறிவித்தனர். ஆனால், படப்பிடிப்பு தாமதமாகத் தொடங்கிய காரணத்தால், தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, தீபாவளிப் போட்டியில் இருந்து விலகி, பொங்கல் போட்டியில் இணைகிறது ‘விசுவாசம்’ என்கிறார்கள்.
 
கடந்த மார்ச் 23ஆம் தேதி ஹைதராபாத்தில் ஷூட்டிங் தொடங்கும் என்று அறிவித்தது படக்குழு. ஆனால், மார்ச் 1ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் படப்பிடிப்புக்குத் தடைவிதித்த தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், 23ஆம் தேதி முதல் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் நடைபெறும் படப்பிடிப்புக்கும் தடைவிதித்தது. இதனால், திட்டமிட்டபடி ஷூட்டிங்கைத் தொடங்க முடியவில்லை.
 
எல்லாப் பிரச்சினைகளும் முடிந்து மே மாதம் 7ஆம் தேதி தான் ஷூட்டிங் தொடங்கியது. முதல் ஷெட்யூலில் 40 சதவீதக் காட்சிகளைப் படமாக்கிவிட்டனர். அடுத்த வாரம் இரண்டாவது ஷெட்யூல் தொடங்க இருக்கிறது. ஆனால், தீபாவளிக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில், அதற்குள் படப்பிடிப்பை முடித்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை முடிக்க முடியாது என்பதால், பொங்கலுக்கு ரிலீஸ் செய்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறது படக்குழு.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கவர்ச்சித் தூக்கலான ஆடையில் ஹன்சிகாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

தொட்டு தொட்டு பேசும் சுல்தானா புகழ் பிரியா வாரியரின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

சச்சின் ரி ரிலீஸுக்கு வெற்றி விழா… 10 மடங்கு லாபம்- தயாரிப்பாளர் அறிவிப்பு!

விமல் படத்தை இயக்கிய இயக்குனர் திடீர் மறைவு.. மாரடைப்பால் உயிரிழந்த சோகம்..!

அஜித்தின் பிறந்தநாளில் ரி ரிலீஸாகும் ‘வீரம்’… இன்று வெளியாகிறது டிரைலர்!

அடுத்த கட்டுரையில்
Show comments