தீபாவளிப் போட்டியில் இருந்து விலகுகிறது ‘விஸ்வாசம்’?

Webdunia
வியாழன், 22 மார்ச் 2018 (13:17 IST)
அஜித்தின் ‘விஸ்வாசம்’, தீபாவளி ரிலீஸ் போட்டியில் இருந்து விலகலாம் என்று கூறப்படுகிறது.



அஜித் – சிவா கூட்டணியில் நான்காவது முறையாக உருவாக இருக்கும் படம் ‘விஸ்வாசம்’. நயன்தாரா ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்தில், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகிபாபு ஆகியோர் காமெடியன்களாக நடிக்கின்றனர். டி.இமான் இசையமைக்கிறார். ‘விவேகம்’ படத்தைத் தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ், இந்தப் படத்தையும் தயாரிக்கிறது.



வருகிற தீபாவளிக்கு இந்தப் படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், போகிறபோக்கைப் பார்த்தால் அதற்கு வாய்ப்பிருக்காது என்கிறார்கள். காரணம், ‘விஸ்வாசம்’ படத்தின் ஷூட்டிங் நாளை முதல் ஹைதராபாத்தில் தொடங்குவதாக இருந்தது. ஆனால், படப்பிடிப்பு நடத்த தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்திருப்பதால், ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்பதே தெரியவில்லை. எனவே, தீபாவளி ரிலீஸ் போட்டியில் இருந்து ‘விஸ்வாசம்’ விலகலாம் என்கிறார்கள்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படம், செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் ‘என்.ஜி.கே.’ ஆகிய இரண்டு படங்களும் தான் தற்போது தீபாவளி ரிலீஸ் போட்டியில் உள்ளன.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அபிஷேக் பச்சனுடனான பிரிவு! வேறொரு திருமணம்.. கரீஷ்மா கபூர் முதலிரவில் நடந்த மோசமான சம்பவம்

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்.. விஜய், ரஜினிக்கு செஞ்சது போதாதா?

‘அஞ்சான்’ படத்தை கிண்டலடித்த ஆர்ஜே பாலாஜி.. இப்ப வம்புக்கிழுத்த லிங்குசாமி

பிக் பாஸ் 9: ஆதிரை மீண்டும் வருகை; இந்த வாரம் எவிக்சன் இல்லையா?

தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா நன்றி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments