Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சல்மான் கான் படத்தை இயக்கும் அஜித் பட இயக்குனர்… நவம்பரில் ஷூட்டிங்!

Webdunia
புதன், 23 ஆகஸ்ட் 2023 (07:18 IST)
அஜித்துக்கு பில்லா மற்றும் ஆரம்பம் ஆகிய இரண்டு வெற்றிப்படங்களைக் கொடுத்த விஷ்ணுவர்தன், மீண்டும் அஜித் பட வாய்ப்புக்காக காத்திருந்தார். சமீபத்தில் விக்னேஷ் சிவன் அஜித் 62 படத்தில் இருந்து நீக்கப்பட்ட போது அந்த படத்தை இயக்க விஷ்ணுவர்தனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்பட்டது. ஆனால் அந்த படத்தை மகிழ் திருமேனி இயக்க உள்ளார்.

இந்நிலையில் விஷ்ணுவர்தன் அதர்வாவின் தம்பி ஆகாஷ் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையில் பாலிவுட்டில் சல்மான் கான் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை பிரபல இயக்குனர் கரண் ஜோஹரின் தர்மா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்று சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் நவம்பர் மாதம் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவான இந்தி படமான ஷேர்ஷா மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எங்க ரெண்டு பேரையும் பிரிச்சு விட்ருங்க: விஜய்சேதுபதியின் 'தலைவன் தலைவி’ டிரைலர்..!

’பாகுபலி 1&2 படத்தின் ரன்னிங் டைம் 4 மணி நேரமா? இரண்டு இன்டர்வல் விடப்படுமா?

சுபாஷ்கரன் - ஷங்கர் பஞ்சாயத்தை தீர்த்து வைத்தாரா ரஜினி? உண்மை என்ன?

சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல்: திடீரென களத்தில் இறங்கும் 'பிக் பாஸ்' தினேஷ்..!

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார்.. திரையுலகினர் அஞ்சலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments