Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஷ்ணுவின் இன்று நேற்று நாளை ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன்

விஷ்ணுவின் இன்று நேற்று நாளை ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன்
, வியாழன், 16 அக்டோபர் 2014 (12:04 IST)
சி.வி.குமார் தயாரிப்பில் விஷ்ணு நடித்த முண்டாசுப்பட்டி திரைப்படத்தின் ஆரம்பக் காட்சிகள் ஒரு சயின்ஸ் ஃபிக்ஷனைப் போலதான் இருக்கும். விண்கல் ஒன்று பூமியில் விழுவதை தத்ரூபமாக எடுத்திருந்தனர். ஸீஜி வேலை அந்தளவு பிரமாதமாக இருந்தது. 
முண்டாசுப்பட்டிக்குப் பிறகு சி.வி.குமார் - விஷ்ணு ஒன்றிணையும் படம், இன்று நேற்று நாளை. இதுவொரு சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படம்.
 
கச்சிதமான திரைக்கதை, வித்தியாசமான களம், மினிமம் பட்ஜெட் என்று தமிழ் சினிமாவில் அட்டகத்தி மூலம் புதிய பாதையை உருவாக்கியவர் சி.வி.குமார். த்ரில்லர், ரொமான்ஸ், காமெடி, ஹாரர் என்று பல்வேறு ஜானர்களில் படங்கள் தயாரித்தவர் முதல்முறையாக இன்று நேற்று நாளை படத்தின் மூலம் சயின்ஸ் ஃபிக்ஷனையும் முயற்சி செய்கிறார்.
 
இந்தப் படத்தை நலன் குமாரசாமியின் அசிஸ்டெண்ட் ரவி இயக்குகிறார். 
 
படம் சிறப்பாக வர நமது வாழ்த்துகள்.

Share this Story:

Follow Webdunia tamil