Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷுடன் நடிக்கிறாரா விஷ்ணு விஷால்? செல்வராகவன் படத்தின் புது அப்டேட்!

Webdunia
வியாழன், 15 ஜூலை 2021 (10:21 IST)
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள ராயன் படத்தில் விஷ்ணு விஷால் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என சொல்லப்படுகிறது.

இயக்குநர் செல்வராகவன்,தனுஷ், யுவன்சங்கர் ராஜா ஆகிய மூவரும் இணையும் புதிய படம் நானே வருவேன். சுமார் பத்தாண்டுகளுக்குப் பிறகு மூவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றவுள்ளனர், புதுப்பேட்டை படத்திற்குப் பிறகு இவர்கள் இணைந்துள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த படத்துக்கான திரைக்கதை மற்றும் பாடல் மெட்டமைப்பது ஆகிய பணிகளில் செல்வராகவன் ஈடுபட்டு வந்தார். படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 20 ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் படத்தின் பெயர் மற்றும் கதை ஆகியவை மாற்றப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் படத்துக்கு புதிதாக ராயன் என தலைப்பு வைக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் கதைக்களத்தையும் கேங்ஸ்டர் களத்துக்கு மாற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் விஷ்ணு விஷால் நடிக்க உள்ளதாகவும் அது சம்மந்தமான பேச்சுவார்த்தை இப்போது நடந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments