Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷால் பேச்சால் நடிகர் சூர்யாவுக்கு வந்த பிரச்சனை!

Webdunia
வெள்ளி, 30 ஜூன் 2017 (18:00 IST)
'ரகுவீரா' என்ற கன்னட படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு தமிழ் நாடு தயாரிப்பாளர் சங்கத் தலைவரும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளருமான விஷால் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கேட்பது எங்களது உரிமை என்று பேசினார்.

 
விழாவில் பேசிய நடிகர் விஷால் தமிழில் தான் பேசுவேன். தவறாக எண்ண வேண்டாம். தண்ணீர் கேட்பது என்பது தமிழர்களுடைய உரிமை. அதனை யாரும் இல்லை என்று சொல்ல முடியாது. நாம் அனைவரும் இந்தியாவில் இருக்கிறோம். எங்களுடைய உரிமையைக் கேட்கிறோம், அதை தவறு என்று எவராலும்  சொல்ல முடியாது என்றார். இதனால் தற்போது  அங்கு கலவரம் தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் தானா சேர்ந்த கூட்டம்  படத்தின் படப்பிடிப்பு இன்றிலிருந்து மைசூரில் நடைபெற இருந்ததாம்.
 
இந்நிலையில் படக்குழு அங்கு முதலில் சென்றிருக்கின்றனர். அப்போது அங்கு நிலவரம் சரியில்லை என்று தெரிந்து கொண்ட அவர்கள் உடனேயே சென்னை திரும்பியிருக்கின்றனர். சூர்யா மற்றும் மற்றவர்களும் தங்களது பயணத்தை ரத்து செய்துவிட்டனர். விஷாலின் துணிச்சலான பேச்சுக்கு ஒருபக்கம் பாராட்டுக்கள் குவிந்து வந்தாலும், எதிர்ப்புகளும் உள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாலியல் குற்றச்சாட்டு வைக்கப்பட்ட ராப் பாடகர் வேடனுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

பாகுபலி The Epic டீசர் ரிலீஸ்… ரசிகர்களுக்குக் காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி!

சிம்பு உடனான படம் என்ன ஆனது? வெற்றிமாறன் சொன்ன பதில்!

மீண்டும் இணைகிறதா ‘அண்ணாத்த’ கூட்டணி?

ரிலீஸுக்கு முன்பே லாபம் பார்த்த சன் பிக்சர்ஸ்.. இத்தனைக் கோடி வியாபாரமா?

அடுத்த கட்டுரையில்
Show comments