Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லட்சுமியைத்தான் திருமணம் செய்து கொள்வேன் – விஷால்

Webdunia
வியாழன், 20 ஜூலை 2017 (18:34 IST)
லட்சுமியைத்தான் திருமணம் செய்து கொள்வேன்’ என விஷால் கூறியுள்ளார்.



 
விஷாலும், வரலட்சுமியும் பல வருடங்களாகக் காதலித்து வருகிறார்கள் என்பது ஊருக்கே தெரிந்த விஷயம். ஆனால், இடையில் லட்சுமி மேனன் வேறு அதிக படங்களுடன் நடித்ததால், அவருடன் கல்யாணம் என்ற தகவலும் உலா வந்தது. சில மாதங்களுக்கு முன்னால், விஷாலைவிட்டுப் பிரிந்தார் வரலட்சுமி. ஆனாலும், இருவருக்குமான நெருக்கம் இன்னும் குறையவில்லை என்றார்கள்.

இந்நிலையில், ‘துப்பறிவாளன்’ டீஸர் வெளியீட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளர் நந்தகுமார், “காமராஜர் போல் பல நல்ல விஷயங்களைச் செய்து வருகிறார் விஷால்” என்றார். அவருக்குப் பின் பேசியவர்கள், “காமராஜர் போல் கல்யாணம் பண்ணிக் கொள்ளாமல் இருக்கக் கூடாது” என்றார்கள்.  இறுதியில் பேசிய விஷால், “காமராஜர் போல் வாழப் போகிறேன் என்று சொன்னால், என் அப்பா இங்கே ஓடிவந்து விடுவார். என் அம்மா ஷாக் ஆயிடுவாங்க. அப்புறம் லட்சுமிகரமான நடிகைகள்… மன்னிக்கவும், ஒரே ஒரு நடிகைதான். அவர் சண்டைக்கு வந்துவிடுவார். எனவே, நான் திருமணம் செய்துகொள்வேன்” என்றார். அவர் வரலட்சுமியைத்தான் சொல்கிறார் என்கிறார்கள் எல்லோரும்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இன்னொரு ‘காவாலா’ பாடலா? ரசிகர்களுக்கு விருந்தாகும் தமன்னாவின் கிளாமர் டான்ஸ்..!

பர்ப்பிள் கலர் ட்ரஸ்ஸில் கலக்கல் போஸ் கொடுத்த திவ்யபாரதி!

கார்ஜியஸ் லுக்கில் கலக்கலான உடையில் மிருனாள் தாக்கூர்… !

ஒழுங்கா இருந்திருந்தா ரசிகர் மன்றம் நடத்திருக்கலாம்… இப்படி பண்றீங்களேடா- ரசிகர்களைக் கண்டித்தசுரேஷ் சந்திரா!

’குட் பேட் அக்லி’ ரிசல்ட் பத்தி கவலையில்லை.. அடுத்த கார் போட்டிக்கு தயாராகும் அஜித்..!

அடுத்த கட்டுரையில்
Show comments