Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சங்க விதியை காட்டி சரத்குமாருக்கு விஷால் பதிலடி

Webdunia
வியாழன், 20 நவம்பர் 2014 (18:04 IST)
சரத்குமார், ராதாரவி உள்ளிட்ட நடிகர் சங்க நிர்வாகிகளுக்கும், விஷாலுக்குமான கருத்து மோதல் வெளிப்படையாக வெடித்துள்ளது.

நேற்று திருச்சியில் பத்திரிகையாளர்களிடம் பேசிய சரத்குமார், நடிகர் சங்கத்துக்கு எதிரான தனது அவதூறு பேச்சை விஷால் தொடர்ந்தால் அவரை சங்கத்தைவிட்டு நீக்க நேரிடும் என்றார்.
 
இதற்கு அறிக்கை மூலம் விஷால் பதிலடி கொடுத்துள்ளார்.
 
சரத்குமாரின் பேச்சு என்னை அதிர்ச்சியடைய செய்துள்ளது. ஒரு நடிகராக, நடிகர் சங்கத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களையும் நான் மதிக்கிறேன். என்னை நீக்குவதாக நடிகர் சங்கம் முடிவெடுத்தால் அதை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன்.
 
நடிகர் சங்க விதி 13-ன் படி நடிகர் சங்க உறுப்பினர் எவராவது, நடிகர் சங்கத்தின் மற்றொரு உறுப்பினரை தனிப்பட்ட முறையில் தரக்குறைவாக தாக்கிப்பேசினால் அவர்கள் தண்டனைக்குரியவர்கள் ஆகிறார்கள். இம்மாதிரி பேசியதற்காக தான் நடிகர் குமரிமுத்து சங்கத்திலிருந்து நீக்கப்பட்டார். அதே போல் என்னை தரக்குறைவாக பேசியவர்களுக்கும் இம்மாதிரியான தண்டனை வழங்கப்படவேண்டும் என்று அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார். 
 
சில தினங்கள் முன்பு ராதாரவி விஷால், நாசர் உள்ளிட்டவர்களை நாய் என்று பொது இடத்தில் திட்டியிருந்தார். அந்த நாய்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்றும் கூறியிருந்தார். இதனை நடிகர் சங்க தலைவர் என்ற முறையில் சரத்குமாரின் கவனத்துக்கு எடுத்து சென்று, ராதாரவியிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப வைத்தனர். அதுதான் சரத்குமாரை விஷாலுக்கு எதிராக பேச வைத்தது. 
 
தன்னை தரக்குறைவாக பேசிய ராதாரவியை நீக்க வேண்டும் என்று தனது அறிக்கையில் விஷால் குறிப்பிட்டுள்ளார்.
 
போருக்கான முரசறைந்துவிட்டார்கள். வரும் நாள்களில் நிறைய ஆக்ஷன் காட்சிகளை எதிர்பார்க்கலாம்.

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

Show comments