Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷாலின் ‘’சக்ரா’’ படப் பாடல் வெளியீடு..யுவனின் குரலில் வைரலாகும் வீடியோ

Webdunia
புதன், 16 டிசம்பர் 2020 (20:14 IST)
நடிகர்  விஷால் தயாரித்து நடித்துள்ள படம் சக்ரா . இப்படத்திற்கு  யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஹர்ல ஃபர்லா என்ற பாடல் யூடியுப் தளத்தில் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

விஷால் நடித்த ’சக்ரா’ திரைப்படம் ஓடிடியில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி ரிலீஸ் செய்ய கடந்த சில நாட்களாக முயற்சித்த நிலையில் திடீரென அந்த படத்தின் மீது வழக்கு ஒன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் சக்ரா திரைப்படத்தை வெளியிட வேண்டுமானால் 4 கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தைச் செலுத்திவிட்டு விஷால் இப்படத்தை வெளியிடலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

விஷால் நடித்த ஆக்சன் திரைப்படம் ரூபாய் 8 கோடி நஷ்டம் என்றும் அந்த பணத்தை திருப்பி கட்டியவுடன் தான் ’சக்ரா’ படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்றும் தயாரிப்பாளர் ரவீந்திரன் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த சில நாட்களாக விசாரணை செய்யப்பட்டு இருந்த நிலையில் தற்போது ரவீந்திரனுக்கு ரூபாய் 4 கோடியை கட்டுங்கள் என நீதிமன்றம் விஷாலுக்கு உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளியானது,


தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments