Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லத்தி படத்தின் ரிலீஸைக் கண்டுகொள்ளாத விஷால்… கையைப் பிசையும் நண்பர்கள்!

Webdunia
வியாழன், 29 செப்டம்பர் 2022 (14:32 IST)
விஷால் நடித்துள்ள லத்தி திரைப்படத்தை அவரது நண்பர்களான நந்தா மற்றும் ரமணா ஆகிய இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.

விஷால் நடித்த ’வீரமே வாகை சூடும்’ திரைப்படம் இந்த ஆண்டு பிப்ரவரி 4-ஆம் தேதி வெளியான நிலையில் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அதையடுத்து விஷாலின் அடுத்த படமாக லத்தி என்ற படத்தில் நடித்துமுடித்துள்ளார். சில தினங்களுக்கு முன்னர் படத்தில் இருந்து ஒரு துணுக்குக் காட்சியைப் படக்குழு வெளியிட்டது. அதன் பின்னர் சென்னையில் படத்தின் டீசர் ரிலீஸ் நிகழ்ச்சி நடந்தது. இந்த படத்தை விஷாலின் நண்பர்களான ராணா மற்றும் நந்தா ஆகியோர் தயாரித்துள்ளனர்.

இந்த படம் செப்டம்பர் 15 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அந்த தேதியில் ரிலீஸாகவில்லை. மேலும் இப்போது வரை ரிலீஸ் எப்போது என்பதை படக்குழுவினர் அறிவிக்காமல் உள்ளன. நவம்பர் மாதத்தில் ரிலீஸ் செய்யலாம் என படக்குழுவினர் திட்டமிட்ட நிலையில் விஷால் அதுபற்றிக் கண்டுகொள்ளவே இல்லையாம். இதனால் நெருங்கிய நண்பர்கள் இருவரும் என்ன செய்வது என்ற குழப்பத்தில் உள்ளார்களாம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments