Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷால் படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக கனல் கண்ணன்… படக்குழு அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 13 அக்டோபர் 2023 (14:07 IST)
தமிழ் சினிமாவின் கமர்ஷியல் இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் ஹரி. அவர் இயக்கிய சாமி, ஆறு, சிங்கம் உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெற்றவை. சமீபத்தில் அவர் அருண் விஜய் நடிப்பில் உருவான யானை திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் பெரியளவில் வெற்றி பெறவில்லை. இதற்கு அடுத்து ஹரி அடுத்து விஷால் நடிப்பில் ஒரு படத்தை இயக்க உள்ளார்.

தாமிரபரணி, பூஜை ஆகிய படங்களுக்குப் பிறகு இருவரும் மூன்றாவது முறையாக இந்த படத்தில் இணைகின்றனர். கார்த்திக் சுப்பராஜ் தயாரிக்கும் இந்த படத்தை மூன்றே மாதங்களில் முடிக்க திட்டமிட்டுள்ளாராம் இயக்குனர் ஹரி.

இந்த படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக சூப்பர் சுப்பராயன் இணைந்த நிலையில் கிளைமேக்ஸ் காட்சிக்கான ஸ்டண்ட்டை மட்டும் கனல் கண்ணன் இயக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. பல ஆண்டு இடைவெளிக்குப் பிறகு கனல் கண்ணன் ஸ்டண்ட் இயக்குனராக இந்த படத்தில் பணியாற்றுகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் போலவே பெட்டியை தூக்கிட்டு கிளம்பும் ராஷ்மிகா மந்தனா.. தனுஷ் படத்தின் அப்டேட்..!

63 வயது பிரபல நடிகரின் மனைவியாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. வைரல் புகைப்படம்..!

ஹோம்லி ட்ரஸ்ஸில் ரைசா வில்சனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

கருப்பு நிற ட்ரஸ்ஸில் காஜல் அகர்வாலின் கார்ஜியஸ் போட்டோஷூட்!

இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தேதி இல்லாமல் வெளியாகும் போஸ்டர்கள்… இதுதான் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments