Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய போஸ்டரோடு துப்பறிவாளன் 2 அப்டேட்டைக் கொடுத்த விஷால்!

vinoth
புதன், 24 ஜனவரி 2024 (09:45 IST)
விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கிய ’துப்பறிவாளன் 2’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென விஷால் மற்றும் மிஷ்கின் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மிஷ்கின் படத்தில் இருந்து விலகினார். லண்டனில் நடந்த படப்பிடிப்பில் இருவருக்கும் இடையே எழுந்த கருத்து வேறுபாட்டால் இந்த படத்தில் இருந்து மிஷ்கின் விலகினார். மேற்கொண்டு படத்தை விஷாலே இயக்குவார் என அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் அந்த படம் அடுத்த கட்டம் நோக்கி நகரவில்லை.

பின்னர் துப்பறிவாளன் 2 வின் லண்டன் படப்பிடிப்பு ஜனவரி 2022 ல் தொடங்கும் என அறிவித்திருந்தார் விஷால். ஆனால் கொரோனா வைரஸ் பரவலால் அங்கு லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால் அப்போது நினைத்தபடி ஷூட்டிங் தொடங்கவில்லை.

இப்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் ரத்னம் என்ற படத்தில் நடித்து முடித்துள்ள விஷால் அடுத்த லண்டனில் துப்பறிவாளன் 2 படத்தைத் தொடங்குவார் என சொல்லப்படுகிறது. இதை உறுதிப் படுத்துவது போல தற்போது துப்பறிவாளன் படத்தின் போஸ்டர் ஒன்றை காமிக்ஸ் வடிவில் வெளியிட்டுள்ளார் விஷால். இதனால் உடனடியாக துப்பறிவாளன் 2 திரைப்படம் மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் நம்ப தொடங்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரெட் ஜெயண்ட் கையில் சென்ற வேட்டையன்.. இனி எல்லா தியேட்டரும் ரஜினி படத்திற்கே..!

ஐரோப்பிய கார் ரேஸ்க்காக பயிற்சி பெறும் அஜித்.. சுரேஷ் சந்திரா வெளியிட்ட புகைப்படங்கள்..!

'தலைவி’ படத்திற்கு பின் மீண்டும் இணையும் ஏ.எல்.விஜய் - கங்கனா ரனாவத்.. விரைவில் அறிவிப்பு..!

சென்னையை காலி செய்கிறாரா ஜெயம் ரவி? மும்பையில் செட்டிலாக திட்டம்..!

பான் இந்திய நடிகராக மாறும் ஹிப்ஹாப் ஆதி!!

அடுத்த கட்டுரையில்
Show comments