ரூ.4 கோடியை கட்டுங்கள்: நீதிமன்ற உத்தரவால் விஷால் அதிர்ச்சி!

Webdunia
வியாழன், 15 அக்டோபர் 2020 (18:15 IST)
விஷால் நடித்த ’சக்ரா’ திரைப்படம் ஓடிடியில் வரும் 30ஆம் தேதி ரிலீஸ் செய்ய கடந்த சில நாட்களாக முயற்சித்த நிலையில் திடீரென அந்த படத்தின் மீது வழக்கு ஒன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது 
 
விஷால் நடித்த ஆக்சன் திரைப்படம் ரூபாய் 8 கோடி நஷ்டம் என்றும் அந்த பணத்தை திருப்பி கட்டியவுடன் தான் ’சக்ரா’ படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்றும் தயாரிப்பாளர் ரவீந்திரன் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த சில நாட்களாக விசாரணை செய்யப்பட்டு இருந்த நிலையில் தற்போது ரவீந்திரனுக்கு ரூபாய் 4 கோடியை கட்டுங்கள் என நீதிமன்றம் விஷாலுக்கு உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.,
 
இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள விஷால் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ’சக்ரா’ படம் கிட்டத்தட்ட ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த வழக்கு காரணமாகவே அந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘அஞ்சான்’ ரீரிலீஸில் சூர்யா இப்படி பண்ணலாமா? நம்பிக்கையை கைவிடாத லிங்குசாமி

அனிருத் கிட்ட இல்லாதது சாய்கிட்ட இருக்கு.. அதான் அவர் காட்டுல மழை.. என்ன தெரியுமா?

மாடர்ன் உடையில் கவர்ந்திழுக்கும் லுக்கில் அசத்தும் மாளவிகா மோகனன்!

பர்ப்பிள் நிற சேலையில் அசத்தும் அதுல்யா ரவி… வைரல் க்ளிக்ஸ்!

விஜய்யால் டெபாசிட் கூட வாங்க முடியாது… இயக்குனர் ராஜகுமாரன் கணிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments