Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆம்பளயில் பச்சையுடன் நடிக்கும் விஷால்

Webdunia
வியாழன், 16 அக்டோபர் 2014 (11:42 IST)
சுந்தர். சி இயக்கத்தில் ஆம்பள படத்தில் நடித்துவரும் விஷால், படத்துக்காக வலதுபுற தோளில் பச்சை குத்திக் கொண்டுள்ளார். இது நிரந்தர பச்சையல்ல. சினிமாவுக்காக குத்தப்பட்ட தற்காலிக டாட்டூ.
பச்சை குத்திக் கொள்வதில் நடிகைகள்தான் முன்னிலையில் உள்ளனர். த்ரிஷா, நயன்தாரா, ஸ்ருதி, ஜனனி, குஷ்பு என்று ஏறக்குறைய அனைவரும் உடம்பில் ஒரேயொரு பச்சையாவது குத்திக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஸ்ருதி சமீபத்தில் தனது ஐந்தாவது டாட்டூவை உடம்பில் குத்திக் கொண்டார்.
 
பூலோகம் படத்தில் ஜெயம் ரவியின் படத்தை த்ரிஷா தனது கை, கால், தொடைகளில் டாட்டூ குத்திக் கொள்வது போல் காட்சிகள் உள்ளன. அதேபோல் ஆம்பள படத்தில் விஷால் தனது வலதுபுற தோளில் டாட்டூவுடன் நடிக்கிறார்.
 
தற்போது ஆம்பளயின் படப்பிடிப்பு ஊட்டியில் நடந்து வருகிறது.

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

Show comments