விஷால் நினைத்திருந்தால் என் மகனை காப்பாற்றி இருக்கலாம்: டிரைவரின் தந்தை கதறல்

Webdunia
செவ்வாய், 4 செப்டம்பர் 2018 (18:40 IST)
விஷாலின் கார் ஓட்டுநர் மரணமடைந்ததை அடுத்து விஷால் நினைந்திருந்தால் என் மகனை காப்பாற்றி இருக்கலாம் என்று டிரைவரின் தந்தை கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

 
நடிகர் விஷாலின் ஓட்டுநர் பாண்டியராஜ் கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் திடீரென மரணமடைந்தார். பாண்டியராஜ் உடல்நிலை பாதிக்கப்பட்டு சில நாட்கள் வேலைக்கு செல்லாமலும் இருந்துள்ளார்.
 
மிகவும் ஏழ்மையாக குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் சிகிச்சைக்கு  பெரிய மருத்துவமனைக்கு செல்ல இயலவில்லை. இதனால் உதவி செய்ய ஆளில்லாமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில் பாண்டியராஜ் மரணம் குறித்து அவரது தந்தை கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார். அவர் கூறியதாவது:-
 
விஷால் நினைத்திருந்தால் என் மகனை காப்பாற்றி இருக்கலாம். உரிய நேரத்தில் அவரிடம் இருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார்.
 
பாண்டியராஜ் உடல்நிலை பற்றி அறிந்தும் விஷால் உதவி செய்ய முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. சமூக வலைதளங்களில் இந்த சம்பவம் தொடர்பாக பலரும் விஷாலை விமர்சித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரபல ராப் பாடகர் வேடன் மருத்துவமனையில் அனுமதி… இசை நிகழ்ச்சி ரத்து!

‘தேரே இஷ்க் மெய்ன்’ முதல் நாள் வசூலை அதிகாரப்பூர்வமாக அறிவித்த தனுஷ்!

தனுஷ் கதையை நிராகரித்தாரா ரஜினிகாந்த்?... திடீரெனப் பரவும் தகவல்!

மம்மூட்டி நுழைந்ததும் எஸ்கேப் ஆன பிரபலம்! அப்போ தனுஷ் - ராஜ்குமார் பெரியசாமி படம் டிராப்பா?

முகமது குட்டி மம்மூட்டி ஆனது எப்படி?... சுவாரஸ்யமானக் கதையைப் பகிர்ந்த மெஹா ஸ்டார்!

அடுத்த கட்டுரையில்
Show comments