Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லட்சுமி மேனனுடன் திருமணமா? ஆவேசமாக விஷால் அளித்த பதில்!

Webdunia
வெள்ளி, 11 ஆகஸ்ட் 2023 (12:24 IST)
கடந்த சில நாட்களாக சமூகவலைதளங்களில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களான விஷாலும் லட்சுமி மேனனும் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக வதந்திகள் பரவி வந்தன. இது ரசிகர்கள் மத்தியில் வைரலானதை தொடர்ந்து இப்போது அதற்கு விஷால் விளக்கமளித்துள்ளார்.
இது சம்மந்தமாக விஷால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “வழக்கமாக நான் என்னைப் பற்றி வரும் வதந்திகளுக்குப் பதில் அளிப்பதில்லை. ஏனென்றால் அது பயனற்றது. ஆனால் இப்போது எனக்கும் லட்சுமி மேனனுக்கும் திருமணம் என்று பரவும் வதந்திகளை நான் மறுக்கிறேன்.

நான் இதை மறுக்கக் காரணம், இந்த விஷயத்தில் ஒரு பெண்ணின் பெயர் இழுக்கப்பட்டு இருப்பதால்தான். நீங்கள் ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையை பாழாக்குகிறீர்கள்.

என்னுடைய திருமணம் பற்றிய தகவல் ஒன்றும் பெர்முடா முக்கோணம் இல்லை. சரியான தருணம் வரும்போது நானே என்னுடைய திருமணம் பற்றி அறிவிப்பேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முன்பதிவிலேயே இவ்வளவு வசூலா? கில்லிக்கு அப்புறம் சச்சினும் கல்லா கட்டுதே!

கேபிஒய் பாலா சினிமா கதாநாயகன் ஆகிறார். அதிகாரபூர்வ அறிவிப்பு..!

க்ரீத்தி ஷெட்டியின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் க்யூட் க்ளிக்ஸ்!

வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்… இன்று முதல் மீண்டெழுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments