விஷாலே இப்படி செய்யலாமா? திரையரங்கு உரிமையாளர்கள் வருத்தம்!

Webdunia
திங்கள், 22 பிப்ரவரி 2021 (19:08 IST)
தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக இருந்த விஷாலே இப்படி செய்வது நியாயமா என திரையரங்கு உரிமையாளர்கள் வருத்தம் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கடந்த வெள்ளியன்று வெளியான விஷாலின் ’சக்ரா’ திரைப்படத்திற்கு எந்தவிதமான புரோமோஷனும்செய்யவில்லை என்று திரையரங்கு உரிமையாளர்கள் கூறி வருகின்றனர். ம் குறைந்தபட்சம் பிரஸ் மீட் கூட வைக்கவில்லை என்றும் நாளிதழ்களிலும் தொலைக்காட்சிகளிலும் விளம்பரம் செய்யவில்லை என்றும் ’சக்ரா’ படம் வெளியானதே பலருக்கு தெரியவில்லை என்றும் கூறிவருகின்றனர்
 
’சக்ரா’ திரைப்படத்திற்கு என பத்திரிகையாளர் சந்திப்பு வைப்பதாக இரண்டு முறை கூறியும் அதனை ரத்து செய்து விட்டார்கள் என்றும் பட வெளியீட்டிற்கு முன்பாக அந்த படம் குறித்த எந்த செய்திகளும் ஊடகங்களில் வரவில்லை என்றும் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக இருந்த விஷாலே இப்படி செய்யலாமா என்றும் திரையரங்க உரிமையாளர்கள் வருத்தப்படுகின்றனர்
 
சரியான புரமோஷன் இல்லாததால் படம் ஓரளவுக்கு நன்றாக இருந்தும் படத்தின் வசூல் திருப்திகரமாக இல்லை என்பதே திரையரங்கு உரிமையாளர்களின் கருத்தாக உள்ளது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments