Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரையரங்கு உரிமையாளர்கள் சந்திப்பை ரத்துசெய்த விஷால்

Webdunia
வெள்ளி, 13 ஏப்ரல் 2018 (13:53 IST)
நேற்று திரையரங்கு உரிமையாளர்களை சந்திப்பதாக இருந்த விஷால், அதை திடீரென ரத்து செய்தார்
 
அதிக டிஜிட்டல் கட்டணம், டிக்கெட் விலையை முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக கடந்த மார்ச் மாதம் 1ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது தயாரிப்பாளர்கள் சங்கம். புதுப்படங்களின் ரிலீஸ், படப்பிடிப்பு, போஸ்ட் புரொடக்‌ஷன், நிகழ்ச்சிகள் என எல்லாமே ரத்து செய்யப்பட்டுள்ளன.
 
கிட்டத்தட்ட ஒன்றரை மாதமாக நடைபெற்று வரும் இந்தப் போராட்டத்தை விரைவில் முடிவுக்குக் கொண்டுவர தயாரிப்பாளர் சங்கம் முயன்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சில டிஜிட்டல் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது.
 
மேலும், திரையரங்கு உரிமையாளர்களை நேரடியாகச் சந்தித்து, அவர்களுடன் உரையாடி நிலைமையை விளக்க இருக்கிறார் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால். நேற்று மாலை 5 மணிக்கு தி.நகர் ஆந்திரா கிளப்பில் இந்த சந்திப்பு நடைபெறுவதாக இருந்தது.
 
ஆனால், திடீரென இந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. அரசு அறிவித்துள்ள 17ஆம் தேதி பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த சந்திப்பு நடைபெறும் என்று தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments