Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேப்டன் விஜயகாந்தும் விஷாலும் ஒன்றா? - சிம்பு ஆவேசம்

Webdunia
புதன், 7 அக்டோபர் 2015 (17:47 IST)
கேப்டன் விஜயகாந்தும், நடிகர் சங்க கிரிக்கெட் அணியான சென்னை ரைனோஸ் அணி கேப்டன் விஷாலும் ஒன்றா என்று சிலம்பரசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

 

சென்னையில் சரத்குமார் அணியினர் செய்தியாளர்களை சந்தித்தனர், அப்போது சிலம்பரசன் உணர்ச்சிவேகத்துடன் பேசினார்.

அவர் பேசியபோது " எஸ்பிஐ சினிமாஸ் உடன் போடப்பட்ட கட்டட ஒப்பந்தத்தில் என்ன தவறு இருக்கிறது. திரையரங்கம் வரவேண்டாம் என்றால் அங்கு என்ன தான் வரவேண்டும் என்று விஷால் அணியினர் விரும்புகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. பயத்திற்காக நான் நடிகர் சங்கத்தில் நிற்க வில்லை குடும்பத்தின் ஒற்றுமைக்காக தேர்தலிலிருந்து விலகத் தயார். சூழ்ச்சி வலையில் நடிகர் சங்கம் விழவேண்டாம் 
 
கேப்டன் விஜயகாந்தும்,நடிகர் சங்க கிரிக்கெட் அணியான சென்னை ரைனோஸ் அணி கேப்டன் விஷாலும் ஒன்றா என்றும் விஜயகாந்த் கடும் முயிற்ச்சியால் கேப்டன் என்ற நிலைக்கு வந்துள்ளார். மேலும், அவர் நடிகர் சங்கம் பெரும் கடனில் இருக்கும் போது மலேசியாவில் கலை நிகழ்ச்சி நடத்தி கடனிலிருந்து நடிகர் சங்கத்தை மீட்டார்.
 
சொந்தப் பிரச்சனைக்காக நடிகர் சங்க பிரச்சனையை விஷால்  கையில் எடுத்துள்ளதாக சிம்பு குற்றம்ச்சாட்டியுள்ளார். குடும்பமாக இருந்த நடிகர் சங்கத்தை தற்போது விஷால் பிரித்து விட்டார் என்று சிலம்பரசன் தெரிவித்தார்.

ஆஸ்கர் நூலத்தில் இடம்பெறுகிறது ஹரிஷ் கல்யாண் திரைப்படம்.. நெகிழ்ச்சியான பதிவு..!

“என் வழியில் நான் உறுதியா நிற்க எம்ஜிஆர் - சிவாஜிக்கு கிடைத்த ரிசல்ட் தான் காரணம்” ; ‘சாமானியன்’ ராமராஜன்!

புதிய கதாபாத்திரங்களில் நடிக்க புதியவர்களோடு பணியாற்ற விரும்புகிறேன்-பாகுபலி சீரிஸில் பின்னணி குரல் கொடுத்த சரத் கெல்கர்!

‘கல்கி 2898 AD’ படத்திலிருந்து பிரபாஸின் சிறந்த நண்பன் மற்றும் எதிர்கால வாகனமான ‘புஜ்ஜி’ அறிமுகப்படுத்தப்பட்டது!

என்னய்யா இதெல்லாம் எடுத்து வெச்சிருக்கீங்க.. வாழ்க்கை வரலாற்று படத்தில் ரேப் சீன்! – அதிர்ச்சியடைந்த டொனால்ட் ட்ரம்ப்!

Show comments