Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷாலுக்கு சண்டக்கோழியாக மாறும் வரலட்சுமி

Webdunia
ஞாயிறு, 28 மே 2017 (21:41 IST)
நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷாலும் நடிகை வரலட்சுமியும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருவதாகவும், நடிகர் சங்க கட்டிடத்தின் முதல் நிகழ்ச்சியாக இவர்களது திருமணம் நடைபெறும் என்றும் கூறப்பட்டு வருகிறது.



 


ஆனால் நடிகர் சங்க தேர்தலின்போது தனது தந்தையை விஷால் கடுமையாக விமர்சனம் செய்ததால் விஷாலுடனான காதலை வரலட்சுமி முறித்துவிட்டதாகவும் ஒரு வதந்தி பரவி வருகிறது.

இந்த நிலையில் விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கவுள்ள 'சண்டைக்கோழி 2' திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க வரலட்சுமி சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே இந்த படத்தின் நாயகியாக கீர்த்திசுரேஷும் இன்னொரு முக்கிய கேரக்டரில் முதல் பாகத்தில் நடித்த மீரா ஜாஸ்மினும் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டிராப் ஆன படம் படம் மீண்டும் உயிர்ப்பெறுகிறதா? சிவகார்த்திகேயன் - சிபி சக்கரவர்த்தி படத்தின் அப்டேட்..!

விஜய் சேதுபதிக்கு சொன்ன கதையை ரஜினிக்கும் சொன்னாரா நிதிலன் சாமிநாதன்? உண்மை என்ன?

’கூலி’ டீசர், டிரைலர் கிடையாதா? வழக்கம் போல் வதந்தி பரப்பும் யூடியூபர்கள்..!

ஹாலிவுட் திரைப்படத்தில் வித்யூத் ஜம்வால்.. 'ஸ்ட்ரீட் ஃபைட்டர்' படத்தில் முக்கிய கேரக்டர்..

மிர்னாளினி ரவியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments