Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகார்த்திகேயன் போல் நானும் பாதிக்கப்பட்டேன் : நடிகர் விஷால் பேட்டி

சிவகார்த்திகேயன் போல் நானும் பாதிக்கப்பட்டேன் : நடிகர் விஷால் பேட்டி

Webdunia
வியாழன், 13 அக்டோபர் 2016 (13:14 IST)
நடிகர் சிவகார்த்திகேயன் மட்டும் பாதிக்கப்படவில்லை. ஒரு காலத்தில் நானும் அவரைப் போல் பாதிக்கப்பட்டேன் என்று நடிகரும், நடிகர் சங்க பொதுச் செயலாளருமான விஷால் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி வெற்றிக்கரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் ரெமோ. இதனால் படக்குழுவினர் சார்பில் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 
 
இந்நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன், படத்தின் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜாவை பற்றி பேசும் போது அழுதுவிட்டார். ரெமோ திரைப்படம் வெளியாக பெரிதும் போராடியதாகவும், பலரும் படம் வெளிவர விடாமல் தொல்லைகள் கொடுத்ததாகவும் கண்ணீர் மல்க கூறினார்.  
தன்னை வேலை செய்ய விடுமாறு வேண்டுகோள் விடுத்ததோடு, நான் எல்லா மேடையிலும் அழுகிறேன் என்று நினைக்க வேண்டாம். நான் உண்மையாக இருக்கிறேன். ஒவ்வொரு வெற்றிக்கும் போராடுகிறேன். யார் ஹிட்டையும் திருடி வரவில்லை” என்றும் தெரிவித்துள்ளார்.
 
இந்த விவகாரம், தமிழ் சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவருக்கு யார் பிரச்சனையை ஏற்படுத்தினார்கள் என்று விவாதிக்கப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில், காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த விஷால் “சிவகார்த்திகேயன் மட்டுமல்ல, நானும் ஒரு காலத்தில் கட்டப்பஞ்சாயத்தால் பாதிக்கப்பட்டேன். நடிகர் சங்கத்தில் அவர் புகார் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யார் சார் இவரு..? விபத்துக்கு பிறகும் விடாமுயற்சியோடு வந்து நின்ற அஜித் குமார்! - வாய்பிளந்த ரசிகர்கள்!

சினிமால நீடிக்கணும்னா இதை கத்துக்கோங்க அனிருத்..! அட்வைஸ் செய்த இசைப்புயல்!

சூர்யாவின் ‘ரெட்ரோ’ ரிலீஸ் தேதி.. அதிகாரபூர்வமாக அறிவித்த சூர்யா..!

வெண்ணிற உடையில் கார்ஜியஸ் லுக்கில் கண்ணைப் பறிக்கும் ஜான்வி கபூர்!

டால் அடிக்கும் வெளிச்சத்தில் ஜொலிக்கும் ரகுல் ப்ரீத் சிங்… ஸ்டன்னிங் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments