Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரையில் பிரம்மாண்டமாக நடக்க உள்ள ‘விருமன்’ பட இசை வெளியீடு… எப்போது?

Webdunia
வியாழன், 28 ஜூலை 2022 (11:15 IST)
விருமன் திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி ஏற்கனவே இணையத்தில் வைரல் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள விருமன்  திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் கார்த்தியோடு அதிதி ஷங்கர், ராஜ்கிரண் மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட ஏராளமானவர்கள் நடித்துள்ளனர். இந்த படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அப்போது நீண்ட விடுமுறை வருவதால் அந்த தேதியைப் படக்குழு முடிவு செய்துள்ளது.

படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஏற்கனவே படத்தில் இடம்பெற்ற ‘கஞ்சா பூவு கண்ணால’ பாடல் வெளியாகி இணையத்தில் ஹிட் ஆனது. இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மதுரையில் உள்ள ராஜா முத்தையா மன்றத்தில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடக்கும் என சொல்லப்படுகிறது.

வழக்கமாக படங்களின் ஆடியோ ரிலீஸ் விழா சென்னையில் நடக்கும். ஆனால் படத்தின் கதைக்களம் மதுரை என்பதால் படக்குழுவினர் மதுரையில் நடத்த திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘குட் பேட் அக்லி’ படத்தின் பிரீமியர் காட்சிகள் நிறுத்தம்.. பின்னனி என்ன?

ரஜினி சூப்பர் ஸ்டார் போல நடந்துகொள்ள மாட்டார்… சோனா பகிர்ந்த தகவல்!

ஆஸ்கர் ஒன்றும் பெரிய விருது கிடையாது.. அதை அமெரிக்கர்களே வைத்துக் கொள்ளட்டும்- கங்கனா கருத்து

தக் லைஃப் படத்தின் முதல் சிங்கிள் அப்டேட் கொடுத்த படக்குழு!

ஐபிஎல் முதல் போட்டி நடக்கும் ஈடன் கார்டன் மைதானத்தில் மழை?.. ரசிகர்கள் அதிருப்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments