Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாதம் ரூ.15 லட்சம் வாடகை: ஆடம்பர வீட்டிற்கு குடிபோகும் நடிகை யார் தெரியுமா?

Webdunia
புதன், 14 மார்ச் 2018 (16:10 IST)
மாதம் ஒன்றுக்கு ரூ.15 லட்சம் வாடகை உள்ள அதிநவீன ஆடம்பரமான வீட்டிற்கு பிரபல நடிகை ஒருவர் தனது கணவருடன் விரைவில் குடியேறவுள்ளார். அவர்தான் பாலிவுட்டின் முன்னணி நாயகியான அனுஷ்கா சர்மா

நடிகை அனுஷ்கா சர்மா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோஹ்லியை திருமணம் செய்தார். தற்போது தேனிலவு மற்றும் உறவினர்களின் விருந்துகளில் பிசியாக இருக்கும் இந்த தம்பதிகள் விரைவில் மும்பையில் உள்ள வோர்லி என்ற பகுதியில் உள்ள ஆடம்பர வீட்டில் குடியேறவுள்ளனர். இந்த வீட்டிற்கு ரூ.1.5 கோடி அட்வான்ஸ் மற்றும் மாதம் ஒன்றுக்கு ரூ.15 லட்சம்  வாடகை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் இந்த வீட்டில் விராத்-அனுஷ்கா தம்பதியினர் ஒருசில மாதங்கள் மட்டுமே குடியிருக்கவுள்ளனர். இதே பகுதியில் விராத் ரூ.34 கோடி கொடுத்து விலைக்கு வாங்கியுள்ள வீட்டில் டெகரேஷன் பணிகள் நடந்து வருவதால், இந்த பணிகள் முடியும் வரை மட்டுமே ரூ.15 லட்சம் வாடகை வீட்டில் இந்த தம்பதியினர் குடியிருக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நான் கோலியைக் காதலித்தேனா?... தமன்னா கொடுத்த பதில்!

என்னது கார்த்தி சின்ன ஹீரோவா?... நெறியாளரின் கேள்விக்கு நச்சென்ற பதில் கொடுத்த லோகேஷ்!

பிரபல நடிகையை Date செய்கிறாரா தனுஷ்?.. இந்தி ஊடகங்கள் பற்றவைத்த தீ!

மணிரத்னத்தின் அடுத்த படத்தில் த்ருவ் விக்ரம் &ருக்மிணி வசந்த்!

சீரியலில் அம்மா - மகன்.. நிஜத்தில் திருமணம் செய்து கொண்ட ஜோடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments