Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கவலைக்கிடமான நிலையில் நடிகர் வினு சக்ரவர்த்தி மருத்துவமனையில் அனுமதி

கவலைக்கிடமான நிலையில் நடிகர் வினு சக்ரவர்த்தி மருத்துவமனையில் அனுமதி
, வெள்ளி, 31 ஜூலை 2015 (10:49 IST)
நடிகர் வினு சக்ரவர்த்தி சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் காரணமாக மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 
 
முரட்டு உருவம், கரகர குரல். இந்த காம்பினேஷனை வைத்து காமெடியில் வெளுத்து வாங்கியவர் வினு சக்ரவர்த்தி. கதாசிரியராக சினிமாவில் நுழைந்து கதை, திரைக்கதை, இயக்கம், நடிப்பு என பல்துறைகளில் பங்களிப்பு செலுத்தியவர்.
 
பல வருடங்களாகவே வினு சக்ரவர்த்தி நடிப்பதை குறைத்துக் கொண்டார். சமீபமாக சர்க்கரை நோய் அவரை கடுமையாக தாக்கியது. இந்நிலையில் நேற்று ரத்த அழுத்தம் மற்றும் மிகை சர்க்கரை காரணமாக மயங்கிவிழுந்த அவரை உடனடியாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். 
 
அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil