Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கனடாவில் படமாகும் வினய் படம்

கனடாவில் படமாகும் வினய் படம்
, புதன், 17 ஆகஸ்ட் 2016 (18:27 IST)
வினய் நடிக்கும் புதிய படம், ஆவணி ஒன்றாம் தேதியான இன்று தொடங்கப்பட்டது. வெங்கடேஷ் இந்தப் படத்தை இயக்குகிறார்.
 

 
சரத்குமாரை வைத்து சரமாரியாக படங்கள் எடுத்தவர் வெங்கடேஷ். நமிதா அவரது கம்பெனி ஆர்டிஸ்ட். வெங்கடேஷ் படம் என்றால் கண்டிப்பாக நமிதா இருப்பார்.
 
ஒருகட்டத்தில் அவரது இயக்கம் எடுபடாமல் போய், அங்காடித்தெருவில் நடிகரானார். அதன் பிறகு நடிகராக சில படங்கள். கடைசியாக ஒரு காமெடிப் படம் எடுத்தார். சின்ன இடைவெளிக்குப் பிறகு மீண்டும் முழுவீச்சில் இறங்கியிருக்கிறார்.
 
இந்த முறை வினய்யை இயக்கும் அவர் கதை நடக்கும் இடமாக கனடாவை தேர்வு செய்துள்ளார். படத்தின் பெரும்பகுதி அங்குதான் படமாக்கப்பட உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரேநாளில் மோதும் விக்ரம், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், ஜீவா