Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமல் நடிப்பில் போஸ் வெங்கட் இயக்கிய ம.பொ.சி படத் தலைப்பு மாற்றம்!

vinoth
வெள்ளி, 14 ஜூன் 2024 (16:59 IST)
தமிழ்  சினிமாவில் இயக்குனரும் நடிகருமாக அறியப்படுபவர் போஸ் வெங்கட். மெட்டி ஒலி சீரியலில் அறிமுகமான இவர் அதில் நடித்த போஸ் என்ற கதாபாத்திரத்தின் காரணமாக போஸ் வெங்கட் என அறியப்பட்டார். அந்த சீரியல் அவருக்கு நல்ல கவனத்தைப் பெற்றுத் தந்த நிலையில் அதன் பிறகு திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.

தலைநகரம், சிவாஜி, கவன் ஆகியவை அவர் நடித்ததில் குறிப்பிடத்தகுந்த படமாக அமைந்தன. கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான கன்னிமாடம் என்ற படத்தின் மூலம் போஸ் வெங்கட்  இயக்குனராக அறிமுகம் ஆனார். அந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதையடுத்து அவர் இப்போது விமல் கதாநாயகனாக நடிக்கும் ம பொ சி என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை வெற்றிமாறனின் கிராஸ்ரூட் புரொடக்‌ஷன் நிறுவனம் கைப்பற்றியிருந்தது. இந்நிலையில் இப்போது இந்த படத்தின் தலைப்பு ‘ம.பொ.சி’ என்பதற்கு பதிலாக ‘சார்’ என மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கலக்கும் கல்கி 2898 ஏடி.. மூன்றாவது நாளிலேயே மூச்சடைக்க செய்யும் வசூல்!

மச்சானின் காதலியை கரம்பிடித்த மாமா! காமெடி கலாட்டா! – குருவாயூர் அம்பலநடையில் OTT விமர்சனம்!

’கல்கி 2898 ஏடி’ படத்தின் 2 நாள் வசூல் இத்தனை கோடியா? தயாரிப்பு நிறுவனத்தின் அறிவிப்பு..!

நடிகர்கள் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கரின் 'நேசிப்பாயா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் லான்ச் விழா!

கருப்பு நிற உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய நிதி அகர்வால்!

அடுத்த கட்டுரையில்
Show comments