Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் லைம் லைட்டுக்கு வந்த அஞ்சல

மீண்டும் லைம் லைட்டுக்கு வந்த அஞ்சல
, வெள்ளி, 27 பிப்ரவரி 2015 (16:06 IST)
விமல், நந்திதா நடிப்பில் பல வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்ட படம், அஞ்சல. இதுவரை கிடப்பில்ங போடப்பட்டிருந்த இப்படம் தற்போது தூசி தட்டப்பட்டு தயாராகி வருகிறது.
 
ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் தயாரிக்கும் இந்தப் படத்தை தங்கம் சரவணன் இயக்கி வருகிறார். விமல், நந்திதாவுடன் பசுபதி, இமான் அண்ணாச்சி, பஞ்சு சுப்பு, ஆர்.வி.உதயகுமார் ஆகியோரும் நடிக்கின்றனர். இசை ரவி கண்ணன், ஒளிப்பதிவு கோபிசுந்தர்.
 
மதுரை அருகேயுள்ள சோழவந்தானில் கதை நடப்பதாக திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. கிராமத்தின் பெருமையையும், கிராமத்தவனின் நற்குணங்களையும், நகரத்துக்கு இடம்பெயர்கிறவர்களும் கிராமத்துக்கு வந்தால் கிராமத்தானாகவே மாறிவிடுவதையும் இப்படம் பேசுகிறது.
 
தற்போது சோழவந்தானில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil